உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்திலே நாடக கலையை வளர்ப்பதற்கென்றே தங்களை அர்ப்பணித்துக் கொண்டு அயராது உழைத்திட்ட ஆன்றோர்கள் பலர். அவர்களிலே முதலிடம் பெறத் தக்க முதுபெருங் கலைஞர் சங்கரதாஸ் சுவாமிகள். இயல், இசை, நாடகம் ஆகிய ஆகிய முத்தமிழிலும் வித்தகராய் விளங்கிய அவர், வளமான தமிழில் வசனம் வரைந்ததோடு நின்றிட வில்லை. கதாபாத்திரங்கள் கவிதை நடையிலேயே உரையாடிடவும் உணர்ச்சி பொங்கப் பாடிடவும் கூடத் தம்முடைய எழுத்தாற்றலை இயக்கினார் உத்வேகத்தோடு. சங்கரதாஸ் சுவாமிகளுக்கு அடுத்தபடியாகத் தமிழ் நாட்டில் நாடகக் கலை வரலாற்றில் தமக்கென ஒரு சிறப்பான இடத்தினைத் தேடிக் கொண்டவர் பம்மல் சம்பந்த முதலியார். •நாடகப் பேராசிரியர்' என்றே நாட்டு மக்களால் கொண்டாடப் பட்டார் அவர். மத்திய அரசினால் 'பத்ம பூஷணம்' என்னும் பட்டமும் வழங்கப் பெற்றுப் பாராட்டுப் புனலிலே திளைத்திட்ட அவர் 24-9-64-ஆம் நாள் இயற்கை எய்தி விட்டார், கலையுலகை இருளிலே ஆழ்த்தி விட்டு. ஆங்கிலக் கல்வியினைப் பழுதறப் பயின்று பி.ஏ. பட்டதாரி ஆகி சட்டக் கல்வியும் கற்றுத் தீர்ப்புக்களை வழங்கிடும் நீதிபதியாகச் சிறந் திட்ட நிலையிலும், நாடகக் கலையின்பால் தமக்குள்ள நாட்டத்தை விட்டிடவில்லை. அவர் 'சுகுண விலாச சபா'- என்னும் நாடகக் குழு ஒன்றினைத் தோற்றுவித்து அதற்கென நாடகங்கள் தீட்டியதுடன் அவற்றிலே அவர் நடித்தும் காட்டினார். புகழையும் நாட்டினார். அரசாங்கப் பணியில் ஈடுபட்டு ஓய்வு பெறுகின்றவர்கள் அத்துடன் தங்கள் வாழ்வே ஓய்ந்து விட்டதாக உள்ளம் உடைந்திடுவர்: உருக் குலைந்து நலிந்திடுவர். நீதிபதியாகப் பணி புரிந்து ஓய்வு பெற்றிட்ட சம்பந்த முதலியாரோ அவர்களுக்கெல்லாம் ஒரு விதிவிலக்காகவே விளங்கினார். விரைந்து செயல்பட்டார். ஏறத்தாழ நூறு நூல்களுக்கு மேல் எழுதியும் குவித்திட்டார் வேகமாக. புராண நாடகங்களையே பார்த்துக் கொண்டிருந்த மக்களிடையே சமூக நாடகங்களைத் தவழ விட்டு வயிறு குலுங்கிடச் சிரிக்க வைத்து ஒரு புதிய பாதையினைப் புகுத்திய பெருமையும் முதன் முதல் அவரையே சார்ந்ததாகும். அவருடைய 'மனோகரா' நாடகத்தினைத் திரைக்கேற்ற கதையாக்கி அதற்கு உரையாடல் தீட்டும் பேறு எனக்குக் கிட்டியது. 530