உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ரொட்டி கிடைக்காவிட்டால் என்ன? 'கேக்' வாங்கித் தின்னச் சொல்லேன்! என்று கிண்டலாக மொழிந்திட்டால் வாங்கித் தின்னச் அதற்குப் பிறகு வெடித்திட்ட விளைவுகள் அரசியலிலே காலூன்றி நிற்க விரும்பிடும் அத்தனை பேருக்குமே அருமையான பாடங்கள்! ஆனால் அந்தப் பாடங்களையெல்லாம் மறந்து விட்டவர்களாகவே நடந்து கொண்டனர் காங்கிரஸ் அமைச்சர்கள். உணவு நெருக்கடியோ மக்களின் குரல் வளையையே நெரித்திடும் வண்ணம் உச்சக் கட்டத்திற்குப் போய்க்கொண்டே இருந்தது. அந்தக் கொடுமைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போலக் கோவையில் காவல் நிலையத்தின் முன்னால் அரிசி கேட்டுக் குரல் எழுப்பிய ஒரே குற்றத்திற்காகப் பரிசாகப் பாய்ந்து சென்றன துப்பாக்கிக் குண்டுகள். பசிக் கொடுமையால் செத்துக் கொண்டிருந்த மக்களுக்காகப் பரிந்து பேசிடப் - பரிகாரம் தேடிடச்- சென்ற முன்னாள் காவல் துறை அதிகாரி திரு. அர்ச்சுனன் பரிதாபமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். 19-10-1964-இல் நான் ஓர் ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொண்டு சென்றேன் சட்ட மன்றத்தில். கோவையில் அரிசிக்காக அவதியுற்றிடும் மக்களுக்காக வாதாடிய முன்னாள் போலீஸ் அதிகாரி அர்ச்சுனன் சுட்டுக் கொல்லப்பட்டதை யொட்டி நாட்டிலே ஏற்பட்டுள் பரபரப்பையும் ஐயப்பாட்டையும் பற்றி விவாதம் நடத்திட வேண்டும் என்று அப்போது கேட்டுக் கொண்டேன். கோவை நிகழ்ச்சி குறித்து நீதி விசாரணைக்கு ஏற்பாடாக வேண்டும் என்றும் வற்புறுத்தினேன். முதல்வர் பக்தவத்சலம் அவர்களோ கோட்டைக்கு வெளியே நாட்டிலே நிலவிடும் கொந்தளிப்பு பற்றி விவாதித்திட முடியாது என்று மறுத்து விட்டார். நீதி விசாரணைக்கான கோரிக்கையையும் ஏற்க முடியாது என்று அழுத்தமாகக் கூறிவிட்டார். இலங்கை வாழ் தமிழர்களைப் பொறுத்த மட்டில், 1964-ஆம் ஆண்டு அதிலும் குறிப்பாக அக்டோபர் திங்கள்-அவர்களுடைய இதயமே எரிந்து கருகிட, கனலை அள்ளிக் கொட்டிய காலப் பகுதியாகும். ஏனெனில் அந்தச்சமயம்தான், அவர்களுடைய வயிற்றெரிச்சலிலே எண்ணெய்யை வார்த்து - வாழ்க்கையிலே மண்ணைப் போட்டு வடிவம் எடுத்திட்டது "சாஸ்திரி - சிரிமாவோ ஒப்பந்தம்." நேருவின் காலத்திலே இலங்கைத் தலைமை அமைச்சராக இருந்த சர் ஜான் கொத்தலவாலாவினால் சாதிக்க முடியாத ஒன்றைத் திருமதி சிரிமாவோ பண்டார நாயகா எளிதில் சாதித்துக் கொண்டு விட்டார் திரு. லால்பகதூர் சாஸ்திரியாரிடம். 536 V