உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி. மு. கழகம்தான் 'சிரிமாவோ - சாஸ்திரியார்' ஒப்பந்தம் தீங்கானது. இலங்கைத் தமிழர் சிக்கலுக்குச் சரியான தீர்வு ஆகாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது. அன்றைய ஆளுங்காங்கிரஸ் அமைச்சர்களின் போக்கினைப் பற்றிச் செஞ்சியிலே 1-12-64-இல் | நடைபெற்ற கூட்டம் ஒன்றில் நானும் அடியிற்கண்டவாறு குறிப்பிட்டேன்: '......அனாதைகளாக விரட்டப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் பற்றிக் கேட்டால், லால்பகதூர் சொல்கிறார்: 'உங்கள் பக்தவத்சலமும், இராமையாவும் அப்போதைய அமைச்சர்கள்) சொல்லித்தான் ஒப்பந்தம் செய்தேன்' என்று! தமிழகத்திலுள்ள எல்லாக் கட்சிகளையும் கலக்காமல் இலங்கைத் தமிழர்களின் தலைவர்களையும் அவமதித்து இந்த ஒப்பந்தம் செய்யச் சொன்னது யார்? புதிதாகக் காங்கிரசுக்குப் போயிருக்கும் நண்பர் (திரு ஈ. வே. கி. சம்பத்) சொல்கிறார் : இலங்கையிலிருந்து வருகிற தமிழர்களை வரவேற்க வேண்டாமா' என்று. 'வருகிறோம்' - என்று கூறி அவர்கள் வரவில்லையே! 'அய்யோ, எங்களைத் துரத்துகிறார்களே! இந்த அநீதியைக் கேட்பாரில்லையா?" என்று அலறியபடியல்லவா அவர்கள் இங்கே தள்ளப்படுகிறார்கள்? நான் குறிப்பிட்ட அந்த அநீதி சிறு கதையாக முடிந்திடாமல் தொடர்கதையாகத்தான் நீண்டிடும் போலத் தோன்றுகிறது. நெப்போலியன் ஒரு முறை “ஃபிரான்ஸ் நாட்டின் இளைஞர்கள் முறையில் கல்விப் பயிற்சி பெறுவதற்கு என்ன தேவை?" என்கிற வினாவினை எழுப்பினான். நல்ல அதற்கு "நல்ல தாய்கள்" - என்கிற விடை கிடைத்ததாம். அதனைக் கேட்டு நெஞ்சங் குளிர்ந்திட்ட நெப்போலியன் - "இந்தத் தாய் என்கிற ஒரு வார்த்தையிலேயே ஒரு கல்வித்திட்டமே பொதிந்து கிடக்கிறதே... நம்முடைய ஃபிரான்ஸ் நாடு நல்ல அன்னையரை அடைந்திருந்தால், அது நல்ல பிள்ளைகளையும் பெறும்" என்று வியப்போடும் கூறினானாம். ஐரோப்பாக் கண்டத்தையே அதிர்ந்திடச் செய்தவன்-அரிமா நிகர்த்த அஞ்சா நெஞ்சினன் நெப்போலியன் - அன்னையர் குலத்திடம் எத்தகைய மதிப்பினை வைத்திருந்தான் என்பதனை அவனுடைய இந்த வார்த்தைகளிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.