உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. அறிக்கை இந்த நிலைமைகளையெல்லாம் சுட்டிக் காட்டி, யொன்றினை உருவாக்கிப் பொதுக் குழுவின் பார்வைக்கு வைத்தேன். அதனை நன்றாக ஆராய்ந்த பின்னர், 'நம் நாடு' வளர்ச்சிக்கென ஒரு நிதியும் தலைமைக் கழகத்திற்கென ஒரு நிதியும் திரட்டித்தான் ஆக வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தது கழகம். அதன்படியே நிதி திரட்டிடும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. சென்னை மாநகரம் முதல் தமிழகத்தின் மூலை முடுக்கிலுள்ள சாதாரணச் சிற்றூர்கள் வரை ஆங்காங்கே கழக முன்னணியினரும் தொண்டர்களும் உண்டியல்கள் குலுக்கிப் பொது மக்களிடம் நன் கொடைகள் பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவ்வாறு உண்டியல் ஏந்திடும் நாளாக 1964-டிசம்பர் ஏழாம் நாளைத் தேர்ந்தெடுத்து, அறிக்கை வெளியிட்டார் அண்ணா. மற்றவர்களைப் போலவே நானும் அந்த நிதி திரட்டும் பணியிலே ஈடுபட்டேன். நண்பர்கள் புடைசூழ 7-12-64 அன்று காலை ஒன்பது மணி அளவில் சென்னையில் அன்பகத்திலிருந்து புறப்பட்டோம், உண்டியல் ஏந்தி, தேனாம்பேட்டை கடை வீதி, பாண்டி பசார் ஆகிய பகுதிகளில் 11-30 மணி வரை நிதி திரட்டினோம்... பின்னர் மீண்டும் நான்கு மணி அளவில் அதே பணியினைத் தொடர்ந்திட்டோம். வழியெங்கும் பொதுமக்கள் வெள்ளமெனத் திரண்டு நின்று உண்டியலை நிரப்பினர்; 'எங்கள் விழிநீரைத் துடைத்திடக்கூடிய ஒரே துணை தி.மு கழகமே!' என்கிற தங்கள் நம்பிக்கையையும் தாங்கள் அளித்திட்ட காசுகளின் மூலம் அவர்கள் வெளிப்படுத்தினர். அறிஞர் அண்ணா அவர்கள் நிதி கேட்டு அறிக்கை விடுத்த நாளுக் கும் தோழர்கள் உண்டியல் ஏந்திய நாளுக்குமிடையில் மிகக் குறுகிய காலமே இருந்துங்கூட, கழகத்தின் தேவைகளைக் கழகத்தினர் நற்பணி 541