உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(அ) 1965 ஜனவரி 26-ஆம் நாளாகிய குடியரசு நாளின் முக்கியத் துவத்தைத் தி.மு. கழகம் உணர்ந்திருந்த போதிலும், தென்னக மக்களின் விருப்பத்தையும் நலத்தையும் சீரழிக்கக் கூடிய விதத்தில் அந்த நாளை இந்தித் திணிப்பு நாளாக இந்தியப் பேரரசினர் மேற்கொண்டிருப்பதாலும், அந்த நாளில் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை வெளிப்படுத்தா விட்டால் தென்னகம் இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக் கொண்டுள்ளது என்று இந்திய அரசினரால் திரித்துக் கூறப்படும் என்பதை உணருவதாலும், அந்த நாளில் தென்னக மக்களின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியையும், மனக் கொதிப்பையும் காட்டுவதன் அறிகுறியாக அந்த நாளைத் துக்க நாளாகக் கொள்வது என்றும், (ஆ) அன்று எல்லா நடத்துவது என்றும், ஊர்களிலும் கண்டனக் கூட்டங்கள் (இ) துக்க நாளின் அறிகுறியாக அன்று கறுப்புக் கொடிகள் கட்டுவது, கறுப்புச் சின்னம் அணிவது என்றும், -இச்செயற்குழு முடிவு செய்திருக்கிறது. இந்தத் தீர்மானம் பற்றி அறிந்தவுடனேயே ஆளும் காங்கிரசார். அனலைக்கக்கினர் •குடியரசு நாளில் துக்கம் கொண்டாடுவதா? அது துரோகச் செயல் அல்லவா?' என்றெல்லாம் அவர்கள் தூற்றினர். சீற்றத்தைக் கொட்டினர். மிகுந்த பொறுப்புணர்வோடு பொருத்தமான சொற்களைக் கொண்டே செயற்குழுவின் தீர்மானம் தீட்டப்பட்டது. குடியரசு நாளின் தனிச் சிறப்பினைக் குறைத்திட வேண்டும் என்பது அதன் குறிக்கோள் அல்ல. மத்திய அரசினர் அந்த ஆண்டுக் குடியரசு நாள் முதல் இந்தியைக் கொலுவேற்றியே தீர்வது என்பதில் குறியாக இருந்திடாமல், வேறொரு களைத் தங்களுடைய திணிப்பு முயற்சிக்குத் தேர்ந்தெடுத்திருந்தால், அந்த வேறொரு நாளைத்'தான் துக்க நாளாகக் கொண்டாடத் தீர்மானித்திருக்கும் கழகம். ஆனால் டில்லியிலே இருந்தவர்கள் அதில் பிடிவாதத்தையே காட்டினர். எனவே, அந்தக் குறிப்பிட்ட குடியரசு நாளையே துக்க நாளாகக் கொண்டாடுவதைத் தன் கடமையாகக் கருதிற்று கழகம். இந்த உண்மை நிலையினை உணர்ந்திட மறுத்து நாங்கள் வேண்டுமென்றே குடியரசு நாளை அவமதிப்பதாகக் குற்றஞ் சாட்டினர் 546