உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவசியமாகும். ஆகவே, இந்தி மட்டும் இந்திய நாட்டின் ஆட்சி மொழியாவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மேற்கு வங்கம் முழுவதிலும் ஜனவரி 26 முதல் ஒரு வார காலத்திற்கு எதிர்ப்பு வாரம் (Protest week) அனுசரிக்கப்படும்." கழகம் நிறைவேற்றிய தீர்மானத்திற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்த காங்கிரசார், வங்க மாநிலத்தில் தேசிய வாதிகள் மேற் கொண்ட முடிவைப் பற்றி மட்டும் வாயையே திறக்கவில்லை. எப்படித் திறப்பார்கள்? இட்லர் மட்டும் இரண்டாம் உலகப் போரிலே வெற்றியை எட்டிப் பிடித்திருந்தால்...இந்த உலகத்தின் நிலைமை எப்படியெல்லாம் மாறியி ருக்கும்? மக்களாட்சி நெறி முறைகள் மண்ணோடு மண்ணாகப் புதைக்கப் பட்டிருக்க மாட்டாவா?' என்றெல்லாம் சிற்சில சமயத்தில் நான் எண்ணிப் பார்ப்பதுண்டு, மனத்திற்குள்ளேயே. அந்த அளவிற்கு ஆங்காரத்துடன் போரினைத் தொடுத்து உலகையே அதிர்ச்சிக்கு ஆட்படுத்திக் கொண்டிருந்தான் இட்லர். 'அவனுடைய நாசிப் படைகள் அதோ ஆலந்தைப் பிடித்து விட்டன- போலந்தை விழுங்கி விட்டன -அதோ பெல்ஜியத்தைக் கைப்பற்றி விட்டன - பிரான்சை நெருங்கி விட்டன' என்று ஒவ்வொரு நாளும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நேரம் அது. கடலிலே சின்னஞ்சிறு மீன்களையெல்லாம் தின்று கொழுத்திடும் திமிங்கிலத்தைப் போல, ஐரோப்பாக் கண்டத்தின் சிறிய சிறிய நாடு களையெல்லாம் தனக்கு இரையாக்கி ஏப்பமிட முற்பட்டு விட்டான் ஜெர்மனியை ஆண்டிட்ட இட்லர். அவனுடைய நாடு பிடிக்கும் நச்சு எண்ணம் இங்கிலாந்து நாட்டுக்கும் நீண்டது; இலண்டனிலே குண்டுமாரி வீசிடவும் தூண்டியது. அதனால் பிரிட்டானிய மக்கள் அடைந்திட்ட பேரதிர்ச்சி- பெரும்பீதி - கொஞ்ச நஞ்சமல்ல. தி. மு. கழகம் இந்தி շտամ 549