உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டன் பாய்ந்து வந்து மாணவர்களைத் தாக்கினர். ஒரு கல்லூரி மாணவர் படுகாயம் அடைந்து உயிர் ஊசலாடும் நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இந்த மதுரைச் சம்பவம் உடனே மாநிலமெங்கும் பரவிற்று காட்டுத் தீயாக. அமைதியாக அறப் போரிலே ஈடுபட்ட மாணவர்களின் நெஞ்சிலே ஆத்திரக் கனலையே அது மூட்டிவிட்டது. அன்று (25-1-65) இரவுதான் அண்ணாவும், நாவலரும், நானும் மற்றக் கழக முன்னணியினரும் ஆங்காங்கே இரவோடு இரவாகத் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்டோம். குடியரசு நாள்- குமுறிடும் இதயங்களை- வெளிப்படித்தும் அவலக் காட்சிகளுடனேயே விடிந்தது. தமிழகத்தில் மட்டுமின்றிக் கேரளம், கர்நாடகம், ஆந்திரம், வங்காளம் முதலான மற்ற மாநிலப் பகுதிகளிலும் அந்நாள் துக்க நாளாகவே கொண்டாடப் பெற்றது. அன்று கழகக் கண்மணிகள் கறுப்புச் சின்னங்கள் அணிந்து தத்தம் இல்லங்களிலே கறுப்புக்கொடி ஏற்றித் தங்கள் வேதனையினை வெளிப் படுத்தினர். அமைதிக்கும் பங்கம் விளைவித்திடும் முறையில்-பொது மக்களுக்குக் குந்தகம் உண்டாக்கிடும் போக்கில்-எத்தகைய வன்முறை யிலும் இறங்கிடவில்லை அவர்கள். என்றாலும்- பொது இடங்களுக்குப் போகாமல் அவரவர்களுக்குச் சொந்தமான இடங்களில் மட்டுமே நின்று நின்று கழகத்தவர் துக்கங்கொண்டாடிய போதிலும், கறுப்புச் சின்னங்களும், கறுப்புக் கொடிகளும் காங்கிர சாரின் கண்களை உறுத்தின போலும்! எனவே, வேண்டுமென்றே-வீண் வம்பு இழுப்பதற்கு என்றே அவர்கள் ஏவி விட்டனர், 'குண்டர் படை' 554