உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பதை விளக்கி உலகப் புகழ்பெற்ற அமெரிக்க 'டைம்' (Time) ஏடு கட்டுரை ஒன்றையே அப்போது வெளியிட்டது. அதில் காணப்படும் சில வரிகள் வருமாறு: "...தென்னிந்தியாவில் உள்ள திருச்சி அருகே இருபது வயதுள்ள உணவு விடுதி ஊழியரான கீரனூர் முத்து என்பவர் மூட்டைப்பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலை செய்து கொண்டுவிட்டார். இப்பகுதி யில் நடந்த மூன்றாவது தற்கொலையாகும் இது. "இதற்கு முன் இரண்டு இளைஞர்கள் இவரைப் போலவே தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டனர். வியட்நாமியர் முறையில் இவர்கள் தங்கள் உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திக் கொண்டனர். இவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந் தவர்கள். இவர்கள் மூவரும் இந்தித் திணிப்பை எதிர்த்தவர்கள். “காங்கிரஸ் ஆளும் கட்சி, இந்தியாவின் 15-ஆவது குடியரசு நாளன்று இந்தியை ஆட்சி மொழியாக்கிக் கொண்டாட்டம் நடத்தியது. புதிய சட்டத்தின்படி இனி ஆட்சி நடவடிக்கைகள் இந்தியில் நடத்தப் பட வேண்டும். ஆனால் தென்னிந்தியாவில் 11 கோடி மக்களுக்கு மேல் 4 திராவிட மொழிகளைப் பேசுகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய இந்த நான்கு மொழிகளையும் பேசும் மக்கள் இந்த (இந்தித்திணிப்பு)ச் சட்டத்தை வெறுத்து எதிர்க் கின்றனர். "இந்தியை எதிர்க்கும் தென்னாட்டவர்களின் வாதத்தில் பொருள் உள்ளது. கல்வியறிவுள்ள இந்தியர்களின் உண்மையான ஒரே பொது மொழி ஆங்கிலம்தான். தென்னாட்டினருக்கு இந்தி வரி வடிவம் மாபெரும் இடையூறு ஆகும். இந்தி (தேவ நாகரி லிபி) எழுத்துக்கள் தொடர்ச்சியான வளைவுகளும், கோடுகளும் மேலே எழுந்து விரியும் உயிர்க் குறியீடுகளும் நிறைந்து மேற்கோட்டுடன் எழுதப்படுகின்றன. தமிழ் எழுத்துக்களோ எழில் நுட்பம் மிக்க சுருள்களும் வளைவுகளும் பொருந்தியவை. -இவ்வாறு தமிழின் தனிச்சிறப்புக்கள் பற்றியும். அமெரிக்க 'டைம்' ஏட்டினர் போன்ற வெளிநாட்டினரே தாங்களும் விளங்கிக் கொண்டு மற்றவர்களுக்கும் விளக்கங்களை அடுக்கினாலும்- இங்கே கொலுவேறியிருந்த காங்கிரசின் கோமான்களோ இந்தி ஏகாதிபத்தி யத்துக்கு வெண்சாமரம் வீசுவதையே தங்களுக்குத் தலையாய பெருமை என்று கருதினர். மத்திய அரசிடம் நல்ல பெயர் வாங்கிவிட்டால் போதும் என்கிற நைப்பாசையுடன் துப்பாக்கிச் சூடுகள் நடத்திடவும் துணிந்து விட்டனர் மாணவச் செல்வங்கள் மீது! 557