உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-எரிகிற எதிர்ப்பினை - எரிச்சலை - இந்தி பேசாதோர் எல்லாருமே வெளிப்படுத்திட விழைந்தனர் என்றாலும் அந்த எதிர்ப்பு, மொழிப் புரட்சியாக மூண்டு எழுந்தது தமிழகத்தில்தான்; அதற்குத் தங்கள் உயிர்களையே விலையாகப் பலி கொடுத்தவர்களும் தமிழ் இனத்த வர்கள்தான். இந்தியத் துணைக் கண்டத்தின் ஒரு கோடியிலேயே அந்தப் புரட்சி வெடித்தது- புதிய வரலாற்றைப் படைத்தது- என்ற போதிலும் - குவலயத்தின் கவனத்தையே ஈர்த்திடும் வகையிலேயே அது எழுச்சி மிக்கதாய் நடைபெற்றது. . அதைப் பற்றி அமெரிக்காவிலிருந்து வெளி வரும் 'நியூயார்க் டைம்ஸ்' ஏடே தலையங்கம் தீட்டிற்று. அதனுடைய எல்லாக் கருத்துக் களையுமே நம்மால் ஏற்றுக் கொள்ள இயலா தெனினும் அடியிற்காணும் சில வரிகள் குறிப்பிடத்தக்கனவே ஆகும். "இந்தியா மிகப் பெரிய பிரச்சினைகளைச் சுமந்துகொண்டிருக்கிறது. இருந்தாலும் இந்தியாவில் இன்று மிகவும் எழுச்சி மிக்கதும், உணர்ச்சி ஊட்டக் கூடியதுமான பிரச்சினை என்னவெனில் இந்தி ஆட்சி மொழி ஆக்கப்பட்டிருப்பதை எதிர்த்துச் சென்னை மாநிலத்தில் நடைபெறும் உக்கிரமான எதிர்ப்பே ஆகும். திராவிட முன்னேற்றக் கழம் இந்தப் பிரச்சினையை ஆளும் காங்சிரஸ் கட்சிக்கு எதிரான கருவியாகப் பயன்படுத்திக் கொண்டு வருகிறது. பிரிட்டிஷார் தங்கள் வலையை வீசி ஒரு நாடாக ஆண்டு, பொது மொழியாக ஆங்கிலத்தைப் பயன படுத்தாத காலம் வரை இந்தியா ஒரு நாடாக இருந்ததே இல்லை. எந்த நாட்டிலும் மொழி மிகப் பெரிய உணர்ச்சி பூர்வமான பிரச்சினை ஆகக் கூடிய சக்தி பெற்றது. ஸ்பெயின் ஓர் உதாரணம் ஆகும். தீக் குளித்து மாண்ட மதராசிகள் வியட்நாமிய முறையைப் பின்பற்றி இருந்தாலும் அவர்கள் புராதன இந்திய சம்பிரதாயத்தையே கடைப்பிடித்துள்ளனர். ‘எதிரிக்கு உன்னால் தரப்படும் மிக மோசமான தண்டனை என்னவென்றால், உன்னையே வருத்திக் கொள்வது, அல்லது உன்னையே கொன்று கொள்வது' என்பதே அந்தச் சம்பிரதாயம்"

  • நியூயார்க் டைம்ஸ்’ இவ்வாறு தீட்டியதைப் போலவே

அமெரிக்காவிலிருந்து வரும் 'டைம்' ஏடு தமிழக மொழிப் புரட்சி பற்றிய கட்டுரை வெளியிட்டதை முன்னரே குறிப்பிட்டுள்ளேன். ஐக்கிய நாடுகள் மன்றத்திலும் கூட போராட்டம் பற்றிய பேச்சு அடிபட்டது. இந்தி எதிர்ப்புப் சென்னைக் கல்லூரிகளின் மாணவர்கள் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியினை வெளிக்காட்டிடும் வகையில் 8-2-65 அன்று ஒரு நாள் 564