உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுவலியோ நிமிடத்திற்கு நிமிடம் என்னை துடியாய்த் துடிக்கச் செய்தது. எனவே, எனக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு செய்தது.எனவே. அரசாங்க மருத்துவமனையிலிருந்து டாக்டர் ஒருவர் வரவழைக்கப் பட்டார். அவரோ என் நிலைமையைப் பார்த்து விட்டு மேற்கொண்டு என்னைப் பயணத்தில் ஈடுபடுத்துவது என் உடல் நலனுக்கு உகந்தது அல்லவென்று உறுதியாகக் கூறி விட்டார். அவருடைய அறிவுரையைப் புறக்கணிக்க முடியாத நிலையில் என்னை மதுரை மத்தியச் சிறைச் சாலைக்கு இட்டுச் சென்றனர். இரவிலோ மேலும் கடுமையாயிற்று வலி; மார்பை இறுக்கிப் பற்றிக் கொண்டு நான் தவித்த தவிப்பு - துடித்த துடிப்பு- கொஞ்சம் நஞ்சமல்ல. வேதனையின் விளிம்பிற்கே நான் விரைந்த வண்ணம் இருந்தேன். மறுபடியும் இரண்டு அரசாங்க மருத்துவ மனையிலிருந்து டாக்டர்கள் அழைத்து வரப்பட்டார்கள், எனக்குச் சிகிச்சை அளித்திட உறக்கம் வருவதற்கென்றே ஊசியும் போடப்பட்டது. வரவில்லை நான் இப்படி நெஞ்சு வலியோடு போராடுவதை நேரிலே கண்டும் கூட என்னை மதுரைச் சிறையிலேயே வைத்திட மனம் காவல் துறையினருக்கு. ஏற்றினர். 18-2-65 விடியற்காலை மறுபடியும் என்னை லாரியிலே மதுரையை விட்ட பிறகும் தென் திசையை நோக்கியே தீராத பயணம். ஆனால் இப்போது புதிய தகுதிகள் சில என் பயணத்திற்குப் பொலிவேற்றின. என்னுடைய லாரிக்கு முன்னே ரிசர்வ் போலீஸ் லாரியும் பின்னே ஒரு ரிசர்வ் போலீஸ் லாரியும் அணிவகுத்து வந்தன. அண்ணாவின் மூன்று தாரக மந்திரங்களில் ஒன்றான கட்டுப் பாட்டினைக் கண்ணே போல் கருதக் கூடியவன் - அதனைக் கடுகளவு கூட மீறத்துணிவில்லாதவன்- என்கிற உண்மை காவல் துறையின ருக்குப் புரிந்திட வில்லையோ என்னவோ? எனக்குரிய கட்டுக் காவலை மிகுதிப்படுத்தியிருந்தனர் தங்களுடைய கடமை உணர்வின் காரணமாக. வழியிலே கயத்தாறு; கட்டபொம்மனின் காலடிச் சுவடு பதிந்திட்ட வீரஞ்செறிந்த மண். நெல்லை நகரின் எல்லையை அடைந்திட்ட பொழுது இன்னொரு ஏற்பாடும் என்னை வியப்புக் கடலிலே வீழ்த்தியது அங்கிருந்து நகர் நெடுகிலும் பாளையங்கோட்டைச் வரையிலும் இருப்புத் தொப்பி அணிந்த போலீசார் இருமருங்கிலும் சுவர் எழுப்பியது போல் வரிசையாக நின் றனர். சிறை 'ஓர் எதிர்க்கட்சித் தொண்டனுக்குக் கூட இவ்வளவு கோலாகலவர வேற்பா? அரசாங்க அணி வகுப்பு மரியாதையா?' என்று உள்ளுற எண்ணிச் சிரித்துக் கொண்டேன் நான்.