உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/602

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று கூறினேன். வேலூர் நகராட்சியும் எனக்குப் பாராட்டு வழங்கிச் சிறப்பித்தது. நெல்லை மாநகர் தந்த வரவேற்போ எனக்கு எல்லையற்ற புல்லரிப்பையே தந்தது. எந்தப் பாளையங்கோட்டைச் சிறையிலே பாதுகாப்புச் சட்டத்தால் நான் சிறகொடிந்த பறவையாக முடக்கப்பட்டுக் கிடந்தேனோ அதே பாளையங்கோட்டை வீதிகளிலே நின்றிட பொதுமக்கள் புடைசூழ்ந்து ஆயிரக்கணக்கான வந்திட்டபோது இரண்டு மாதச் சிறை வாழ்வுக்கே இத்தனை அன்புப் பரிசா என்று என்னால் எண்ணாமல் இருந்திட முடியவில்லை. பவனி பெங்களூர் நண்பர்களின் அன்பு வெள்ளமோ பொருள்களின் உருவத்திலேயும் பொங்கி வழிந்தது. கர்நாடக மாநிலத் தோழர்களின் அன்புக் கட்டளைக்கேற்ப 1-6-65-இல் நான் பெங்களூர் போய்ச் சேர்ந்தேன். புகை வண்டி நிலையத்திலேயே திரளாக வந்திருந்து வரவேற்பளித்தனர் கொள்கை மறவர்கள். அன்று தொழிற்சாலை ஊழியர்கள் பெங்களூர் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் எனக்குத் தேநீர் விருந்தளித்தனர். மாலை 5-30 மணியளவில் மைக்கோ இரவு ஏழு மணி அளவில் சிவாஜி நகரில் கர்நாடகமா நிலத் தி.மு.க. அமைப்பாளர் நண்பர் திராவிடமணி எம். சி. தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திரு சோழன் எம். சி. முதலான தோழர்கள் பாராட்டு மழை பெய்து என்னைத் திணறிடச் செய்தார்கள். 62 நாட்கள் திருவருளால் நான் பாளையங்கோட்டைச் சிறையிலே பக்தவத்சலனார் கைதியாக இருந்ததை எடுத்துக் பாதுகாப்புக் காட்டிடும் வகையில் அந்தக் கூட்டத்தில் 62 பொருள்களைப் பரிசாக அளித்தார்கள் தங்கள் அன்பின் சின்னங்களாக. அவற்றைப் பெற்றுக்கொண்ட நான் குறிப்பிட்டேன்: "...இந்தப் பரிசுகளைப் பார்க்கும்போது, 'மீண்டும் நீங்கள் சிறை செல்ல வேண்டும்; அதற்கு உபயோகமாக இந்தப் பொருள்களைக் கொடுத்திருக்கிறோம்'-என்பதற்கு அறிகுறியாகத்தான் இவைகளைத் தந்திருக்கின் றீர்களோ என எண்ணுகிறேன். "சிறைக்கு ஏற்ற - சிறையிலே அனுமதிக்கக்கூடிய களான பெட்டி, படுக்கை, தண்ணீர் ஆகியவற்றைத்தான் எனக்குக் கொடுத்திருக்கிறீர்கள் வைக்க பொருள் கூஜா 596