உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/609

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைப்பாக (Autonomous body) இயங்கிட வேண்டும் என்பதையே அவர் வற்புறுத்தி வந்தார். காணப் 1929 மார்ச்சிலே அவர் உருவாக்கிய ஒரு தீர்மானத்தில் படும் அடியிற்கண்ட இரண்டு பிரிவுகள் அவர்தம் உள்ளக்கிடக்கையினை நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன; (1) மாநிலங்களுக்கு எஞ்சிய அதிகாரங்கள் உள்ள கூட்டாட்சி முறையில் தான் வருங்கால அரசிலமைப்பு வடிவம் அமைந்திட வேண்டும். (2) ஒரே சீரான அளவிலான மாநில சுயாட்சி எல்லா மாநிலங் களுக்கும் வழங்கப்பட வேண்டும். ஆனால் ஜின்னா அவர்களின் இந்தக் கருத்து கசப்பையே அளித்தது காங்கிரசுக் தலைவர்களுக்கு. எனவே ஏற்றுக் கொள்ள மறுத்தனர் அவருடைய கோரிக்கையை, முஸ்லிம் மக்களின் முன்னேற்றத்தையே தம்முடைய மூச்சாக- அவர்களுக்கென்று தனி நாடு கேட்பதையே முக்கிய தமது இலட்சிய மாக-அவர் உழைத்திட முற்பட்டதற்குக் காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர்கள் கடைப்பிடித்திட்ட சில கொள்கைகளும் காரணம் என்று தெரிகிறது. தம் உள்ளத்தை முள்ளென உறுத்திய அந்தக் கொள்கைகளைப் பற்றி 1937-இல் நடைபெற்ற லக்னோ- முஸ்லிம்லீக் மாநாட்டிலும் இவ்வாறு தலைமையுரையில் குறிப்பிட்டிருக்கிறார்: "இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மேலும் மேலும் புறக் கணிக்கப்படுவதற்குத் தற்போதைய காங்கிரஸ் தலைமையே- குறிப் பாகக் கடந்த பத்தாண்டுக் பத்தாண்டுக் காலமாகப் பொறுப்புடையதாகும். இந்தி தான் இந்தியா முழுமைக்கும் தேசிய மொழியாக இருக்க வேண்டும்; 'வந்தேமாதரம்' பாடல் தான் எல்லார் மீதும் திணிக்கப் பட வேண்டும். காங்கிரஸ் கொடியைத் தான் எல்லாரும் மதிக்க வேண்டும்; அதற்குக் கீழ்ப் படிய வேண்டும். (இவையே காங்கிரசார் கொள்கைகள்!)" மாநில சுயாட்சித் தத்துவம் மறுக்கப்பட்டது. ஏற்றுக் இந்தி - தேசிய மொழியாக முதலானவையே ஜின்னாவுக்கு ஆத்திர மூட்டின கொள்ளப்பட்டது— இந்திய - ஒருமைப்பாட்டுக்கும் அந்த நாளில் வெடி வைத்தன - என்ப தை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது. நேரு அவர்களும் மத்திய அரசு 'ஆண்டை'யாகவும், மாநில அரசு அடிமை'யாகவும் அமைந்திடாமல் - இரு அரசுகளும் ஏரிலே 603