உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/616

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 பிச்சைக்காரர் ஒழிப்பு நான் எழுதிய 'பூமாலை,என்னும் கதை திரைப் படமாக எடுக்கப் பெற்றது. 'மேகலா' பட நிறுவனத்தின் சார்பில் உருவான அதற்கு நானே திரைக்கதை அமைத்து, உரையாடலும் தீட்டியிருந்தேன். 1965-அக்டோபர் இறுதி வாரத்தில் தமிழகம் எங்கும் 'பூமாலை' திரையிடப்பட்டது. அதனுடைய துவக்க விழாக்காட்சி கோல்டன் படப்பிடிப்பு. நிலையத்தில் நடைபெற்றது. அறிஞர் அண்ணா அவர்கள் தம் குடும்பத்தினருடன் வருகை புரிந்து சிறப்பித்தார். மற்றக் கழக முன்னணியினரும் வந்திருந்தனர். தமிழகத்தில் எத்தனையோ இயக்கங்கள்-கட்சிகள்-தோன்றிய போதிலும் பேச்சுக் கலைக்குப் பேரெழிலைப்-பெரும் வரவேற்பினைப் பெற்றுத் தந்திட்ட பெருமை தி. மு. கழகத்திற்கே உண்டு. கழகத்தைச் சார்ந்தவர் பேச வருகிறார் என்றால் கடலெனத் திரண்டு விடுவர் மக்கள். கல்லூரிகளில், பள்ளிகளில் கல்வி கற்கின்ற மாணவ மணிகளுக்கும் சுவையான சொற்பொழிவினைக் கேட்கும் ஆர்வம் ததும்பி வழியும். தங்கள் இலக்கிய மன்றங்களுக்கு எங்களை அழைத்திட வேண்டும் என வற்புறுத்துவர். ஆனால், அந்த நாட்களில் கல்லூரி முதல்வர்களுக்கும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் எங்களை அழைப்பதென்றாலே எங்கே 'கட்சி அரசியல்' பேசிவிடுவோமோ என்கிற கலக்கம். 'கட்சி அரசியலுக்கு' அப்பாற்பட்டும் கொடுக்கப்பட்ட தலைப்பினை ஒட்டியே இலக்கியச் சொற்பொழிவினை நிகழ்த்திடவும் கழகத்தவரால் இயலும் என்பதனையும் எத்தனையோ தடவைகள் மெய்ப்பித்திருக்கிறோம். அவ்வாறு இலக்கியச் சொற்பொழிவுகளை ஆற்றிடும் வாய்ப்புகள் 1965 - நவம்பர் திங்களில் எனக்கு அடுத்தடுத்துக் கிட்டின. சென்னை-கெல்லட் உயர்நிலைப் பள்ளியில் பாரதியார் விழாவில் கலந்து கொண்டு அவர்தம் சிறப்பியல்புகளை- சீர்திருத்த எண்ணங்களை இந்தியையும்- சம்ஸ்கிருதத்தையும் வடநாடுவரை சென்று அவர் 610