உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/631

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பஞ்சாபி சுபா' தனி மாநிலம் அமைத்திடத் தலைமை அமைச்சரே வாக்குறுதி வழங்கி, வேண்டுகோள் விடுத்த பின்னரே சாந்த் பதே சிங்கும் தன் உயிர்த்தியாக முயற்சியைக் கைவிட்டரா. இந்த விவேகமான முடிவை முன்பே விரைந்து அறிவித்திருந்தால் எத்துணை நல்லபெயர் ஏற்பட்டிருக்கும் மத்திய அரசுக்கு என்று என்னால் அப்போது எண்ணாமல் இருக்க முடியவில்லை. தோன்றிய கால முதல் தூண்டா மணி விளக்காய்த் தொன்மைச் சிறப்பெல்லாம் சுடர்வீசி நின்றாலும்-'கன்னி' இளமையிலும் கலையாத தலை மகளாம் அன்னைத் தமிழுக்கு அகிலமெல்லாம் புகழ் உண்டு; இன்றல்ல பன்னெடுங்காலந் தொட்டே... அந்தப் புகழ் மணத்தினை இக்காலப் போக்கிற்கு ஏற்ப மாநாட்டு வடிவிலே மேலும் பரப்பிட அரிய முயற்சியொன்றினை மேற்கொண்டனர் அயல்நாடுகளில் உள்ள தமிழ் அறிஞர்கள். 66 தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" -என்னும் பாரதியின் கனவும் நனவாகிடும் வண்ணம் கடமையாற்றிட முற்பட்ட குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர் மறைத்திரு தனிநாயக அடிகள். அவர்தம் பேரார்வத்தாலும், மலேசியா-சிங்கப்பூர் நாடுகளில் வாழும் செந்தமிழ்ச் செம்மல்களின் தீவிரமான உழைப்பாலும்- முதலாவது உலகத் தமிழ்க் கருத்தரங்க ஆராய்ச்சி மாநாடு மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் 1966 ஏப்ரல் திங்களில் கூட்டப் பெற்றது. அப்போது மலேசியாவின் தலைமை அமைச்சராக இருந்த துங்கு அப்துல் ரகுமானே மாநாட்டினைத் திறந்து வைத்தார். அப்போது அவர் தமிழின் உயர் தனிச் சிறப்பினை வியந்து உரைத் ததாகக் கூறப்படும் சில கருத்துக்கள் எப்போதுமே நம் உள்ளத்தைப் புல்லரிக்கச் செய்வனவாகும். உலகம் முழுவதுமே பல்வேறு நாடுகளிலும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டோர் வாழ்கிறார்கள் என்றாலும் தென் கிழக்கு ஆசிய நாடுகளிலேயே மலாய் தீபகற்பத்தில்தான். தமிழகத்திலிருந்து சென்றவர்கள் பெரும் எண்ணிக்கையில் குடியேறியிருக்கிறார்கள். எனவே மலேசியாப் பள்ளிகளிலும், பல்கலைக் கழகத்திலும் தமிழ் பாட 626