உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/643

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுச்சிப் பிழம்புகளாய்-எரிமலைச் சிகரங்களாய் - தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் எண்ணற்ற மாணவ இளஞ்சிங்கங்கள் அங்கே திரண்டிருந்தனர். ஆனால். அந்த மாநாட்டிற்கு முன் கூட்டியே என்னால் சென்றிட முடியவில்லை. காரணம், மாநாடு தொடங்கிய முதல் நாளான 18-6- 66 மாலையில் தென்காசியில் தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் ஒன்றில் நான் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. அடுத்த நாள் 19-6-66 காலையிலோ மதுரையில் டாக்டர் இலக்குவனார் துவங்கிய 'குறள் நெறி' நாளிதழ் வெளியீட்டு விழாவில் சிறப்புரை ஆற்றிடவும் ஒப்புக் கொண் டிருந்தேன். மதுரை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நான் தஞ்சைக்கு விரைந்து சென்ற போது மாநாடே முடியுந்தறுவாயில் இருந்தது. அண்ணா அவர்கள் வீணைக் குரலில் தேனில் குழைத்தெடுத்த செந்தமிழ்ச் சொற்களில் வீர முழக்கம் புரிந்து கொண்டிருந்தார் தானைத் தளபதியாக. அலைகடலின் ஓசையும் அடங்கிவிட்டதோ என்னும்படியாக அண்ணாவின் விளக்கவுரையினை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந் தனர் மாணவ மணிகள். அந்த அமைதியான கடலினூடே நான் மேடையை நோக்கி மெள்ள ஊர்ந்திட முற்பட்டேன். அண்ணா அவர்கள் பங்கேற்றிடும் எந்தப் பொது நிகழ்ச்சியிலும் அவர்தான் இறுதி உரையாற்றுவார். அவருக்குப் பின்னர் எவர் பேச முற்படினும் அது எடுபடவே எடுபடாது. அன்றையத் தஞ்சை மாணவர் மாநாட்டிலும் அண்ணா பேசத் தொடங்கிய பின்னரே நான் சென்றதால் எனக்குச் சொற் பொழிவு நிகழ்த்திடும் சுமை குறைந்தது என்றே நான் எண்ணிக் கொண்டேன். ஆனால், அண்ணா அவர்களோ தம்முடைய சொற்பொழி வோடு மாநாட்டினை முடிவிற்குக் கொணர்ந்திடவில்லை. அந்த 637