உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/651

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரைகள் உடைந்து வெள்ளம் பல முனைகளில் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. ஏரி மிகவும் பழுதுபட்டுப் போவதுடன் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று ஆறுமுகம் கவலை தெரிவித்தார். இன்னும் சில மாதங்களில் அண்ணா தலைமையில் ஆட்சி உருவாகி, நான் பொதுப்பணி அமைச்சர் பொறுப்பேற்று, அதே கருங்குழி விடுதியில் மாவட்ட அதிகாரிகள், சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி, மதுராந்தகம் ஏரி உட்படப் பல ஏரிகளின் சீர் திருத்தப் பணிகள் பற்றி முடிவுகள் எடுப்பேன் என்று அப்போது யாரும் கருதியிருக்க முடியாது. ஆனால் அதுவே சில மாதங்களில் நடந்து விட்டது. இயற்கைப் புயலால் ஒரு முறை கருங்குழி விடுதியில் வாட்டம்! அடுத்து வீசிய அரசியல் புயலால் அதே கருங்குழி விடுதியில் பொதுப் பணிக்கான கூட்டம். மூன்றாவது பொதுத் தேர்தல் மூலம் 1962-இல் தேர்ந்தெடுக்கப் பட்ட தமிழகச் சட்டமன்றத்தின் இறுதிக் கூட்டம் 9-11-1966 அன்று நடைபெற்றது.