உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/656

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணை மறைத்திட வேண்டுமா, கருத்தைச் சிதைத்திட வேண்டும அந்தக் கட்சி வெறி? மராட்டியத்திலும், குஜராத்திலும் உள்ள தமிழ்ப் பெருங்குடி மக்களைச் சந்தித்திடவும், பம்பாய் ஆமதாபாத் முதலான நகரங்களில் தேர்தல் நிதியளிப்புக் கூட்டங்களில் கலந்துகொண்டிடவும் 12-11-66 காலை 9-10 மணி அளவில் சென்ட்ரல் நிலையத்திலிருந்து கிளம்பிய புகைவண்டியில் புறப்பட்டேன் சென்னை விட்டு. நான் பம்பாய்ப் பெருநகரத்தை அடைவதற்குள்ளேயே வழியில் ண்டக்கல், பூனா, கிர்க்கி, கல்யாண் முதலான இடங்களில் கழகத் தோழர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு வந்து தங்கள் அன்பு மழையிலே என்னை நீராட்டித் திளைத்தனர். பம்பாய் விக்டோரியா டெர்மினஸ் ரயில் நிலையத்தினுள் புகை வண்டி நுழைந்தபோதே கழகத் தோழர்கள் எழுப்பிய வாழ்த்து முழக் கங்கள் அந்த வண்டியில் பயணம் புரிந்திட்ட அத்தனை பேருடைய கவனத்தையுமே ஈர்த்திடும் வண்ணம் எதிரொலி எழுப்பின. கரங்களிலே கழகக் கொடியினை ஏந்தி, ஆயிரக்கணக்கில் அந்தப் புகை வண்டி நிலையத்தையே ஆக்கிரமித்து நின்றிட்ட காளையர்களைக் கண்டபோது, நான் மராட்டிய மாநிலத்திற்குத் தான் வந்திருக்கிறேனா, இல்லை, தமிழகத்திலேதான் இருக்கிறேனா என்கிற உணர்வு என்னுள் எழுந்தது. அந்தப் புகை வண்டி நிலையமே அதிர்ந்திடும் வகையில் எனக்கு வழங்கப்பட்ட வரவேற்பினை, அணிவிக்கப்பட்ட மாலைகளைக் கைத்தறி ஆடைகளைப் பல வடநாட்டுக்காரர்களும் கூட ஏன் வெளிநாட்டுக்காரர் களும்கூட வேடிக்கை பார்த்தனர் வியப்போடு. பின்னர், திறந்த காரில் அமர்ந்தவாறே கழகத் தொண்டர் படையி ளரின் அணிவகுப்பைப் பார்வையிட்டேன். பம்பாய் சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்கும் விடுதியில் நான் தங்கிக்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர் கழகத் தோழர்கள். ஆனால், ரயில் பம்பாயை அடைவதற்குத் தாமதமாகி விட்டதால், என்னால் விடுதிக்குச் சென்று களைப்புக்கு விடை கொடுத்திட ஓய்வு எடுக்க முடியவில்லை. மாலை நான்கு மணிக்குத் திட்டமிட்டபடியே கிளம்பிய ஊர் வலத்தில் உடனடியாக நான் கலந்துகொள்ளும்படி ஆயிற்று. 650