உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/659

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பகற்பொழுது முழுவதும் பயனில்லாமல் கழிந்து விட்டதேர்' என்கிற வேதனை வேலெனத் துளைத்தது என் நெஞ்சினை. மாலை ஐந்து மணி அளவில்தான் பின்னர் விமானம் கிளம்பிற்று பம்பாயிலிருந்து. நான் ஆமதாபாத்தை அடைந்திட்ட பொழுது இரவு மணி ஏழு. எனினும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் என் வருகைக்காகக் காத்திருந்தனர். வாழ்த்தொலிகள் எழுப்பி வரவேற்றனர். காலை ஏழு மணிக்கே ஆமதாபாத் விமான நிலையத்துக்கு அலை அலை யாய் வந்து விட்ட இலட்சிய வைரங்கள் அவர்கள் ஏறத்தாழப் பன்னிரண்டு மணி நேரம் கால் கடுத்திடக் காத்துக் கொண்டிருந் திருக்கிறார்கள். கொளுத்தும் வெயில்; பசியால் கொதிக்கின்ற வயிறு; எனினும் கழகத்தின் பால் அவர்கள் கொண்டிருந்த பாசம் குன்றிடவில்லை! அதனால்தான் வெட்ட வெளியான அந்த விமான நிலையத்தில் ஆடவர் கள் மட்டுமின்றி அரும்புகளைச் சுமந்திட்ட அன்னையரும் நின்றிருக் கின்றனர் வெகு நேரமாக! தமிழ்ப் பெருங்குடியினர் அவ்வாறு பெருந்திரளாய்க் குழுமி யிருந்ததைக் கண்ட விமான நிலைய அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் தங்கள் ஆச்சரியத்துக்கு அணை போட்டுக் கொள்ள முடியவில்லை போலும்! "தி. மு. கழகத்தின் வளர்ச்சி ஆமதாபாத்திலேயே இப்படி என்றால், தமிழகத்தில் எப்படி இருக்கும்!" என்று இரண்டொருவர் வாய் விட்டே தங்கள் வியப்பினை வெளிக்காட்டியிருக்கின்றனர், நம் கழகத் தோழர்களிடம். ஆமதாபாத்தில் மணிநகர் என்பது தமிழர்கள் பெரும் எண்ணிக் கையில் வாழ்ந்திடும் பகுதியாகும். அங்கு நான் சென்றிட்ட போது, ஆடி வெள்ளம் போல் ஓடி வந்தது மக்கள் கூட்டம். அதனைக் கட்டுப் டுத்தி எனக்கு வழியமைத்துக் கொடுப்பதற்குள் காவல் துறையினரும் கழகத் தொண்டர்களும் படாதபாடு பட்டனர். மணிநகர் வட்டத் தி.மு. கழகத்துக்குச் சொந்தமான இல்லத்தைப் பார்வையிட்ட பின் அதில் இரு வண்ணக் கொடிகளை ஏற்றி வைத்து விட்டு இன்னொரு புதிய இல்லத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுவிட்டுத் தேர்தல் நிதியளிப்பு விழாக் கூட்டத்தில் உரையாற்றிட நான் விரைந்து சென்றேன். ஆமதாபாத்தில் காங்கரீயா அம்பிகா ஆலை 2-ஆம் எண் அருகில் அருகில் அழகிரி அண்ணன் அவர்கள் பெயரால் அமைந்திட்ட 653