உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/673

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 கோட்டூரில் கொலை வெறியரிடையே 1967-ம் ஆண்டு பொதுத் தேர்தலின் முதற்கட்டமாக 15-2-67- ஆம் நாள் சென்னையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதற்கு முதல்நாள் இரவு சென்னை நகரில் இருபாராளுமன்றத் தொகுதிகளிலும் உள்ள எல்லா சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் சென்று கழகத் தொண்டர்களை ஊக்கப் படுத்தி விட்டுத் தியாகராய நகர்த் தொகுதியில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் தேர்தல் அலுவலகத்திற்கு இரவு பதினொரு மணிக்கு வந்தேன். அப்போது மூன்று கார்கள், என் காரைத் தொடர்ந்து வந்து வேறு ஓர் இடத்தில் நிறுத்தப்பட்டதை நான் கவனித்தேன். எனினும் அதனை அதிகமாகப் பொருட்படுத்தவில்லை. பிறகு, அங்கிருந்து மயிலாப்பூர்த் தொகுதியில் அரங்கண்ணல் அவர்களின் தேர்தல் அலுவலகம் சென்றேன். அங்கே தோழர்கள் டி. கே. கபாலி, டி.கே. கபாலி, வேலு முதலிய நண்பர்களுடன் நிலைமைகளை விவாதித்து விட்டு இறுதியாக நான் போட்டியிடும் சைதாப் பேட்டைத் தொகுதிக்குக் கோட்டூர் வழியாகச் செல்லத் தொடங்கினேன். நான் தியாகராய நகரில் கண்ட அதே மூன்று கார்களும் என் காரைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. என் காரில் காஞ்சிமணிமொழியார்,வெங்கிடங்கால் சந்தானம். வாழைக் கரை ராஜகோபால் ஆகியோர் இருந்தனர். கோட்டூரில் மாநகராட்சி மகப்பேறு இல்லத்திற்கு முன்னால் என் காரை நிறுத்தி அருகேயுள்ள தேர்தல் அலுவலகத்திற்குச் செல்வதற்குக் கீழே இறங்கினோம். அதற்குள் எங்களைத் தொடர்ந்து வந்து கொண்டி ருந்த மூன்று கார்களிலுமிருந்து பளபளக்கும் பயங்கர ஆயுதங்களுடன் கொலை வெறிக் கூச்சல் போட்டுக் கொண்டு குண்டர்கள் பலர் குதித் தோடி வந்தனர். மணிமொழியார், சந்தானம், ராசகோபால் ஆகிய மூவராலும் கட்டாயமாக மகப்பேறு மருத்துவ மனைக்குள் நாள் தள்ளப்பட்டேன். மருத்துவமனையின் கதவைத் தாழிட்டுக் கொண்டு அந்த குண்டர்களைத் தடுத்து நின்றனர் மூவரும். அதற்குள் கதவுகள் நொறுங்கின. மருத்துவ மனையில் இருந்தவர்கள் போலீசுக்கு 'போன்' மூலம் தகவல் கொடுத்தனர். அதற்குள், ஓர் இளம் கழகத் தோழன், என்னைக் கொல்லைப்புறமாக இழுத்துக் கொண்டு அந்தக் காரிருளில் ஓடினான். 667