உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/707

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேர்த்தியை இணைத்துக் காரியமாற்றி முன்னேற்றம் கண்டிருத்திஞர். அப்படிப்பட்டவர் விருது பெறுவதால் நான் தனிப்பட்ட முறையில் பெருமை அடைவதை நீங்கள் அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறேன்' ண்டிஜாம். -என்று உளந்திறந்து அப்போது அண்ணா பாராட்டினார். நன்றியுரை நவின்றிட்ட நான், 98 "...கடந்த மார்ச் 6-ஆம் நாள் பொதுப்பணி அமைச்சராக இதே மண்டபத்தில் நான் உறுதி மொழி எடுத்துக்கொண்டி அந்த நாளைவிட விருது பெற்ற இந்த நாளை நான் பெருமைக்குரிய நாளாகக் கருதுகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாகப் பாசமுள்ள அண்ணளின் கையால் விருது பெற்றிருக்கிறோம் என்பதை எண்ணுகிற நேரத்தில் உள்ளபடியே நான் பெருமையடைகிறேன்" - -என்று குறிப்பிட்டேன். 40650 அண்ணாவை அடுத்து நான் முதலமைச்சர் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட பின்னர் நண்பர் எஸ். டி. சுந்தரம் அவர்களைச் செயலாள ராகக் கொண்டு இயங்கும் அந்தச் சங்கீத நாடக சங்கமே பிறகு 'இயல், இசை, நாடக மன்றம்' என மூன்று தமிழையும் வளர்க்கக் கடமைப்பட்டது என்கிற வகையில் புதுப் பெயரினை தமிழ் பெயரினைப் பூண்டது. மே-நாள். தொழிலாளர்களுக்கு மேன்மை தரும் நன்னான்: மேதினியெங்கும் கொண்டாடப்படும் பொன்னாள். 1967-ஆம் ஆண்டு விடுமுறை விடுமுறை உண்டு என அண்ணாவால் அறிவிக்கப்பட்ட அந்த மே முதல் நாளில், ஓர் அரிய கடமையை ஆற்றினோம் என்று நானே நெஞ்சாரக் களித்திடக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிட்டியது. காங்கிரசார் ஆண்ட காலத்தில் 1964-இல் பஸ் தொழிலாளர் ஒரு நான் வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள். அது தொடர்பாக 63 தொழி லாளர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுப் பின்னர் 52 பேர் வேலைக்குத் திரும்ப எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றனர். எஞ்சிய பதினொரு தொழிலாளர்கள் வேலை தரப்படாமல் பழி வாங்கப்பட்டு விட்டனர். மூன்றாண்டுகளாக மன்றாடியும் முன்னாலிருந்த ஆட்சியினர் அந்தத் தொழிலாளர்கள் மீது கருணையே காட்டிடவில்லை. தி. மு. கழகம் அரசுப் பொறுப்பினையேற்றுப் போக்குவரத்துத் துறை எனக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் பழி வாங்கப்பட்ட நண்பர்கள் என்னிடம் வந்து முறையிட் டார்கள். உடனே அந்தத் தொழிலாளர்கள் அத்தனை பேரையும் மீண்டும் அலுவலில் அமர்த்துமாறு அந்த மே நாளில் ஆணை பிறப்பித்தேன். 701