உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/712

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1967- செப்டம்பரில் அந்தக் "கூவம் நதிச் சீரமைப்புத்திட்டம்" முதலமைச்சர் அண்ணா அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. அப்போது அவர் குறிப்பிட்ட சொற்கள் வருமாறு: வெகுகாலமாகவே துர்நாற்றம் பிடித்து ஆறு என்று ஏசப்பட்டு வந்துள்ள இந்த ஆறு இன்று மிகுந்த பாக்கியம் செய்துள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து சென்னைக்குப் புதிதாக வந்து போகக் கூடியவர்கள் அவரவர் ஊர் சென்றதும் இந்த ஆற்றின் துர்நாற்றம் பற்றியே பேசுவார்கள். புறப்படுகிற இடத்தில் தூய்மை யாகவே உள்ள இந்த ஆறு அலைந்து வளைந்து அழுக்கைச் சேர்த்துக் கொள்கின்றது. 'கடலோடு போ!' என்று நகர அதை விரட்டுகிறார்கள். கடல் அலையோ 'நீ இங்கே வராதே!' என்று விரட்டுகின்றன. ஆக, இந்தப் பலமான போராட்டம் பல காலமாகவே நடைபெற்று வருகின்றது. இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்கக் கூடியதே இந்தத் திட்டம். மக்கள் "முதல் பட்ஜெட் தயாரிக்கும் போதே இந்தத் திட்டத்துக்குப் பணம் ஒதுக்கும்படி என்னுடைய தம்பி கருணாநிதி என்னைத் துளைத்துக் கொட்டி விட்டார். 'ஒதுக்கியிருக்கிறேன்' என்று சொல்லியும் அது - பட்ஜெட்டில் இருக்கிறதா என்று பார்த்த பின்னரே திருப்தி அடைந் தார்.. நகருக்கு எழில் தோற்றத்தையும், வாணிபப் பெருக்கையும் அளித்திடக் கூடியது இந்தத் திட்டம். இதனை நிறைவேற்றிச் சென்னையைச் சிங்காரத் திருநகராக்குவதே நமது கடமை." - -அண்ணாவின் வார்த்தைகளிலிருந்தே எத்துணைக் கேவலமான முறையில் சென்னையின் அழகைச் சீரழித்தது அன்றையக் கூவும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். தமிழகத்தின் கலையழகைப் பருகிட விரும்பி வந்திட்ட வெளிநாட்டவரையெல்லாம் விரைந்து விரட்டியடித்திடும் ‘பெரும் புண்ணியத்தையும்'கூவம் ஆறு அப்போது தன் வயிற்றிலே கட்டிக் கொண்டிருந்தது! அத்தகைய அருவருக்கத்தக்க காட்சிகளை அகற்றிடவும், சென்னை மாநகரத்தை அழகுத் திருநகராய் மாற்றிடவுமே கூவம் சீரமைப்புத் திட்டத்தில் நான் குறியாக இருந்து செயலாற்றினேன். பொறியியல் வல்லுநர்களின் ஒத்துழைப்போடு அதை நிறைவேற்றிட முடிந்ததில் என் நெஞ்சிற்கு ஏற்பட்டுள்ள நிறைவுப் பெருமிதம் நிகரற்றது என்றால் அது மிகையில்லை. இந்தியாவைப் போன்ற ஒரு பெரிய ஜன நாயக நாட்டில் தழைத்திட வேண்டுமென்றால், நாட்டுடைமைக் சமதர்மமும் 786