உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/721

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

றுத்துவதறகாகச் சென்னை-மத்திய ரயில்வே நிலையத்திற்குச் சென்றி ருக்கிறார் திரு கருணாநிதி; அதன் மூலம் தன்னுடைய தனித் துணிச் சலுக்கு ஒரு நல்ல உதாரணத்தைப் படைத்திருக்கிறார்! கழகத்தைச் சார்ந்த நாங்கள் நாட்டின் மொத்த நல்னையும் கருத்தில் கொண்டு காரியமாற்றிய போதிலும் இந்தியைத் திணித்திடும் தன் திட்டத்தை விட்டுக் கொடுக்க மத்திய அரசு முன் வரவில்லை. இதனால், எதிர்ப்புக் கிளர்ச்சிகள் வலுத்த வண்ணமே இருந்தன. சட்டம்-ஒழுங்கு முற்றிலும் குலைந்து நிலைமை கட்டுக்கடங்காமல் போவதற்கு முன்னர் மொழிச் சிக்கலுக்கு உடனடியாகத் தீர்வு கண்டிடத்தான் வேண்டுமென்று கழக அரசு உணர்ந்தது. எனவே 23-1-1968 அன்று தமிழகச் சட்ட மன்றத்தின் அவசரக் கூட்டம் ஒன்று கூட்டப் பெற்றது. அதில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்தி ஒழிப்புத் தீர்மானத்தை முன் மொழிந்தார் அண்ணா. ... மத்திய அரசின் இந்தித் திணிப்புத் திட்டத்தை இந்த மன்றம் ஏற்க மறுக்கிறது. 66 "தமிழகத்தின் எல்லாப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றிவிட்டுத் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து இந்தி மொழியை அறவே நீக்கிட இம்மன்றம் தீர்மானிக்கிறது. “என். சி. சி. முதலிய அணிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்தி ஆணைச் சொற்களை நீக்கி விடுவது என்றும், இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க மறுத்தால், என். சி. சி. போன்ற அணிகளைக் கலைத்து விடவும் இந்த மன்றம் தீர்மானிக்கிறது." அண்ணா கொண்டு வந்த அந்தத் தீர்மானத்தின் மீது உரை யாற்றிய காங்கிரஸ் குழுத்தலைவர் திரு கருத்திருமன் - "இப்போது மாணவர்கள் கேட்கிறார்கள் என்பதற்காகச் சட்ட மன்றத்தை அவசரம் அவசரமாகக் கூட்ட வேண்டுமா?" என்று கேட்டார். அவருக்குத்தான் அண்ணா இப்படி விடையளித்தார்; "மாணவர்கள் யார்? அவர்கள் நம் ரத்தத்தின் ரத்தம். சதையின் சதை; நம் எதிர்காலத்தின் உருவங்கள். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த இந்தி ஒழிப்புத் தீர்மானம், மாணவ மணிகளின் மனச்சுமையை இறக்கி அவர்தம் எதிர்காலத்தையே ஒளி மயம் ஆக்கிய பெருமைக்குரியதாகும். வரியாகப். அந்தத் தீர்மானம் தமிழக வரலாற்றிலே வைர பொறிக்கத்தக்கது; கழகத்தின் புகழ் மகுடத்திற்குப் பொன்னொளியைச் சேர்த்து நிற்பது. அமைச்சர் நிலையில் நான் என் கடமைகளை ஆற்றிக்கொண்டிருந்த வேளையில் திருச்சி வானொலி நிலையத்தார் விடுத்திருந்தனர். அழைப்பொன்றை B