உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/734

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படும் சோலை வனமாய் நமக்கு ஆறுதல் அளிக்கிறது. அவரைப் பின்பற்றி ஒரு சிலர் நாடகக் காப்பியங்களை அங்கொன்றும் இங் கொன்றுமாக உருவாக்கிட முயன்றிட்ட போதிலும் பொதுமக்களின் நெஞ்சங்களிலே நிலையான இடம் பிடித்திடும் வகையில் அவை அமைந்திடவில்லை. திரு பம்மல் சம்பந்த முதலியார் பல தமிழ் நாடகங் களை எழுதினாலும் அவை காப்பிய வடிவமோ கவிதை நடையோ பெறவில்லை. சிலப்பதிகாரத் தேன் சுனையில், தீராத ஆசையுடன் அடிக்கடி மூழ்கித் திளைத்திடும் எனக்கு, அந்தக் கதைக்கே நாடகக்காப்பிய வடிவம் தந்தால் என்ன என்று தோன்றியது. அந்த எண்ணத்தின் விளைவாக எழுந்ததே என்னுடைய 'சிலப்பதிகார நாடகக் காப்பியம்' நூல். தமிழர்கள் மட்டுமே சிலப்பதிகார அருமை பெருமைகளை அறிந்திருந்தால் போதுமா, மற்ற மொழிக்காரர்களும் மற்ற நாட்ட வரும் அதன் பழச்சாறு சுவையினைப் பருகித் திளைத்திட வேண்டாமா என்றும் சிந்தித்தேன். ஆங்கில மொழியில் புலமை மிக்கவரான திரு .டி.ஜி.நாராயணசாமி அவர்களைக் கொண்டு நான் எழுதிய தமிழ் நூலையே மொழிபெயர்க்குமாறு ஏற்பாடு செய்தேன். அந்த நூல்களின் வெளியீட்டு விழாதான் 18-1-1968-இல் உலகத் தமிழ் மரநாட்டு வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு பிரதிநிதிகளுக்கு அளிக்கப்பட்ட வழியனுப்பு விருந்தோடு இணைந்து நடைபெற்றது. முன்னாள் முதல்வர் திரு பக்தவத்சலம் அவர்கள் விழாவுக்குத் தலைமை தாங்கி என்னை உளந்திறந்து பாராட்டியதுடன், "இந்த உலகத் தமிழ் மாநாட்டுக்கே மகுடம் சூட்டுவது போல் இந்த நிகழ்சி அமைந்திருக்கிறது" -என்றும் குறிப்பிட்டார்கள். 'சிலப்பதிகார நாடகக் காப்பியம், தமிழ் நூலை அறிஞர் அண்ணா அவர்கள் வெளியிட, அதனை இலங்கை அமைச்சரின் துணைவியார் திருமதி திருச்செல்வம் பெற்றுக்கொண்டார்; ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை ஆஸ்திரேலிய நாட்டினைச்சேர்ந்த திரு. ஜோர்தான் என்பவர் பெற்றுக்கொண்டார். அப்போது அண்ணா அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்! ........ தமிழில் உள்ள காப்பியங்களும் செய்யுள் நூல்களும் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றால், உருவத்திலேயும்; நாடக வடிவத்திலேயும்,கட்டுரைவடிவத்திலேயும்பல நூல்கள் நமக்குத்தேவைப் 728