உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/737

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 ஹிம்மத்' ஏட்டுக்குப் பேட்டியளித்தேன் மூன்று நாட்கள் கழித்து வடநாட்டிலிருந்து வெளியாகும் 'ஹிம்மத்' (Himmat) ஆங்கில ஏட்டின் ஆசிரியர் திரு லாலா என்பவர் என்னைப் பேட்டி கண்டிடச் சென்னைக் கோட்டைக்கு வந்தார். அவர் எழுப்பிய சில வினாக்களும் அவற்றிற்கு நான் அளித்த விடைகளும் வருமாறு: கேள்வி : இந்தியாவின் சொல்லும் தீர்வு என்ன? மொழிச் சிக்கலுக்குத் தாங்கள் நான்: எங்கள் தலைவர் அண்ணா அமெரிக்காவிலும் இங்கும் சொல்லியிருப்பதைப் போன்று மொழிப் பிரச்சினையையே 25 ஆண்டுகளுக்குத் தள்ளி வைத்துவிட வேண்டும். கேள்வி: மத்திய மாநில மாநில உறவு பலப்படுவதற்குத் தாங்கள் கூறும் யோசனை என்ன? நான் : வெளிநாட்டு உறவு, பாதுகாப்பு, செய்திப் போக்கு வரத்து போன்ற ஒருசிலவற்றை மட்டும் மத்திய அரசு எடுத்துக் கொண்டு மீதியுள்ள அதிகாரங்களை மாநில அரசுக்குத் தருவது மத்திய மாநில அரசுகளின் உறவு பலப்பட வழி வகுக்கும்; உண்மையான தேசிய ஒருமைப்பாடும் ஏற்படும். கேள்வி: தங்களுடைய இந்த யோசனைக்கு மற்ற மாநிலங்களின் ஆதரவு இருக்கிறதா? எண்ண ம் நான் : மற்ற மாநிலங்களிலுள்ளவர்களிடம் இந்த இருக்கிறது. அதை ஒன்று சேர்த்து உருவாக்கி யார் எழுப்புவது என்பதுதான் பிரச்சினை. கேள்வி : தமிழகம் இந்தியாவுக்கு எந்த வகையில் வழிகாட்ட விரும்புகிறது? நான் : வேற்றுமையுணர்ச்சி களையப்பட்டு, ஒன்றுமையுணர்ச்சி ஏற்பட வேண்டுமானால் பிறரது நியாயமான உணர்ச்சிகளை மதிக்கும் மனப்பக்குவம் ஏற்படவேண்டும். இந்தியாவில் இப்போது. வேற்றுமையுணர்ச்சி களையப்படற தமிழகத்தின் நியாயமான மொழியுணர்ச்சியைப் பிறர் மதிக்க வேண்டும். அப்படி மதிப்பதன் 733