உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/757

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னைப் பொறுத்தமட்டில் அண்ணாவின் அடிச்சுவட்டில், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் முயற்சியில் என் நெஞ்சம் கூறும். நீதிக்கேற்ற முறையில் முதலமைச்சர் பொறுப்பினை நிறை வற்றுவதற்கு என்னாலானவரை முயன்று வந்திருக்கிறேன். 'எதிர்க்கட்சி நிலையில் இருந்த காலத்தில் என்னென்ன கழக இலட்சியங்கள் எதிரொலிக்கப்பட்டனவோ அவற்றையேதான் நாள் முதலமைச்சரான பிறகும் செயற்படுத்திட முனைந்திருக்கிறேன். அமைச்சர்கள், கழகத் தோழர்கள், அதிகாரிகள் ஆகியோரது ஒத்துழைப்புடன் கடந்த ஐந்தாண்டு காலத்திற்குள் என்னென்ன காரியங்கள், எத்தகைய இடையூறுகள், தடைக் கற்களுக்கிடையே நடைபெற்றன என்பது உங்கள் யாவருக்கும் தெரியும். அவற்றைப் பற்றியெல்லாம் விரிவாக 'நெஞ்சுக்கு நீதி' இரண்டாம் பாகத்தில் பின்னர் எழுதலாம் என எண்ணியுள்ளேன். என்னைக் கைதியாக்கிச் சூழ்ந்து கொண்டிருக்கும் கடமைகளின் பெருஞ்சுமையால் காலத்தின் அருமையால் எனக்குச் சிறிது ஓய்வு தேவைப்ப[கிறது. வெகுவேகமாகப் பல நிலையங்களில் நிற்காமலே ஓடிவந்த விரைவுப் புகை வண்டி கூட இடையில் ஒரு பெரிய சந்திப்பில் களைப்பாற்றிக் கொள்ள நீரோ நிலக்கரியோ டீசலோ ஏற்றிக்கொள்ளச் சிறுபொழுது நின்று புறப்படுவது உண்டு. அப்படித்தான் கொஞ்சம் இடைவேளை எனக்கும் தேவைப்படுகிறது சிறிது இளைப்பாறிய பின்னர் ‘நெஞ்சுக்கு நீதி'யின் நீடித்தபயணம் இரண்டாம் பாகமாகத் தொடர்ந்து நடைபெறும் என்பதை, உறுதியாகக் கூற விரும்புகிறேன், ஒன்றை மட்டும் இங்கே நான் தெளிவாகப் பதிய வைப்பதும் என் கடமையாகும். நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின்போதும் அண்ணா அவர்களைப்பற்றிய நினைவே எனக்கு ஊன்றுகோலாய்த் துணைபுரிகிறது.