உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னுரை மனிதன், நூறாண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயச் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ஐம்பது வயதைத் தாண்டிய நான், வாழ்க்கையில் முக்கால் பகுதிக்கு மேல் முடித்துவிட்ட நிலையில் என் கடந்த கால வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்து "நெஞ்சுக்கு நீதி" என்ற தலைப்பில் இந்தப் பெருநூலின் முதற் பாகத்தைத் "தினமணி கதிர்" இதழில் தொடர்ந்து எழுதினேன். இரண்டாம் பாகத்தை "குங்குமம்" இதழில் தொடர்ந்து எழுதினேன். இரண்டாம் பாகத்தை எழுதி முடிக்கும்போது அறுபது வயதைக் கடந்து; இந்த நூல்களுக்கான முன்னு ரையை எனது அறுபத்தி இரண்டாவது அகவையின்பொழுது எழுதுகிறேன். இந்த அறுபத்து இரண்டு ஆண்டுகளில்-மிகப் பெரும் பகுதி-பொது வாழ்வுக்கே செலவாகியிருக்கிறது என்பது, என் இதயத்துக்கு ஆறுதலைத்தர வல்லதாகும். எஞ்சியிருக்கும் நாட்களும் சிறப்பாகத் தமிழுக்கும், தமிழின மக்களுக்கும்- - பொதுவாக மக்கட் பணிக்கே பெரிதும் பயன்பட வேண்டு மென்பது என் தணியாத ஆசை. நடந்து வந்த பாதையை ஒரு முறை திரும்பிப் பார்த்து விட்டு, "ஏ, அப்பா! இவ்வளவு தூரம் நடந்துவிட்டோமா? இனிமேல் நடக்க முடியாது” என்று அயர்ந்து போவதற்குப் பதிலாக-"பரவாயில்லை! இவ்வளவு தூரம் நடந்துவிட்டோம். இன்னும் சிறிது தூரம் தானே!" என்ற புதிய விறுவிறுப்பைப் பெற்றக வேண்டும். அந்த விறுவிறுப்பைப் பெறத்தான் என் வாழ்க்கையை நான் திரும்பிப் பார்த்துக்கொள்கிறேன்.