உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 நண்பர்கள் முகம் வாடலாமா? நான் எழுதி நடித்த 'பழனியப்பன்' நாடகத்தை நூறு ரூபாய்க்கு வாங்கிக் கொண்டவர் 'திராவிட நடிகர் கழகம்' என்ற பெயரால் ஒரு கலை மன்றத்தைத் துவக்கி கழகப் பிரசார நாடகங்களை நாடகங்களை நடிப்பது என்ற தீர்மானத்துடன் என்னை அணுகினார். நானும் அதற்கு ஒப்புதல் அளித்து, முதல் முதலாக நாடகக் குழு விழுப்புரத்தில் முகாமிட்டது. என்னையும் அந்த மன்றத் தில் இணைந்து நடிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். நான் எழுதும் நாடகத்தில் மட்டுமே நடிப்பது என்ற நிபந்தனையுடன் அதற்கு ஒப்புக் கொண்டேன். நாடகங்களைத் துவக்குவதற்கு முன்பு ஒரு மாத காலம் விழுப்புரத்தில் ஒத்திகைகள் ஆரம்பிக்கப்பட்டன. அங்கே நாடக மன்றத்தினர் தங்குவதற்காக ஒரு வீடு வாடகைக்குப் பிடிக்கப் பட்டது. என்னுடன் தென்னனும், சி. டி. மூர்த்தியும் இருந்தார்கள். இளமை முதல் நான் தனியாக இருந்து பழக்கப்பட்டவன் அல்ல. இரண்டு, மூன்று நண்பர்களுடன்தான் என்னைக் காண முடியும். அன்பு, நட்பு என்பதற்குப் பொருள் புரியாத ஒரு சில மனிதர் களுக்கு நான்கு நண்பர்களுடன் ஒருவனைப் பார்ப்பதே பொறாமையாக இருக்கும். ஏதாவது பொல்லாங்கு கூறச் செய்யும். யார் யாருடைய கண்களையோ உறுத்துகிறது என்பதற்காக நான் கவலைப்பட்டவனும் அல்ல. என் நண்பர்களின் முகம் வாடுவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பல நண்பர்களில் ஓரிருவர் நான் காட்டும் பாசத்தைப் பைத்தியக்காரத்தனம் என்று கருதியிருக்கலாம்; அல்லது அதனைப் பயன்படுத்திக் கொண்டு என்னை ஏமாற்றியிருக்கலாம். அதைப் போலவே. என்னைப் பற்றி அவர்கள் தவறாகக் கருது மளவிற்கு என்னையறியாமல் இடையிலிருப்பவர்களால் ஏதாவது நடந்தும் இருக்கலாம். ஆனால் ஒரு சில நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டு பொதுவாக நட்பு என்னும் பண்புக்கே புதிய தத்துவம் கற்பித்து விடக்கூடாது. தென்னன், மூர்த்தி இருவரின், துணை யுடன் விழுப்புரத்து வேதனைகளை நான் சமாளித்துக் கொண்டேன். விழுப்புரத்தில் எங்கள் அன்றாட நிகழ்ச்சிகளின பட்டியலைச் சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன். 81