உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திராவிட நாட் திராவிடருா என்றாலும், அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் 1940-ல் திருவாரூரில் கூடிய நீதிக் கட்சி மாநாட்டில் பெரியார் அவர்களுடைய தலைமையில், "திராவிட நாடு திராவிடருக்கே" என்ற தீர்மானத்தைத் திரு பி.பாலசுப்ரமணியம் முன்மொழிய, அறிஞர் அண்ணா அவர்களும் சி.பாசுதேவ் அவர்களும் வழிமொழிந்தனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகள் தொன்மை திராவிட மொழி ஒன்றிலிருந்து தோன்றியவைகளே என்பதும் அம்மொழிகளைப் பேசுவோர் திராவிடர் என்பதும் கால்டுவெல் பாதிரியார் போன்ற அறிஞர் பெருமக்கள்செய்த ஆராய்ச்சி முடிவுகளாகும். . இதனை அடிப்படையாக வைத்துத்தான் திருவாரூர் மாநாட்டில் அறிஞர் அண்ணா அவர்கள் திராவிடர்களுடைய கலை, நாகரிகம், பொருளாதார முன்னேற்றம் ஆகியவைகளுக்கான வழிமுறைகளைப் பற்றி நீண்டதொரு விளக்கச் சொற்பொழிவாற்றினார். அதுவரை நீதிக் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பை வகித்து வந்த திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள், கட்சித்தலைவர் பெரியார் அவர்களிடம் பல்வேறு காரணங்களால் கருத்து வேறுபாடு கொண்டு அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டார். அப்போது 'விடுதலை'ப் பத்திரிகையின் துணை ஆசிரியராக இருந்த அண்ணா அவர்கள் நீதிக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திராவிடம், திராவிடர் என்ற உத்வேகத்தை நாட்டில் எழுப் புவதற்காக திராவிட நாடு' என்கிற கிழமை இதழை அண்ணா அவர்கள் காஞ்சிபுரத்தில் துவக்கினார்கள். அதனையொட்டித் திராவிடர்க் கழகம் என்ற பெயரால் ஒரு துணை மன்றம் போன்ற அமைப்பினை அண்ணா அவர்கள் காஞ்சிபுரத்தில் உருவாக்கினார். அந்தத் துணை அமைப்பு எதிர்காலத்தில் நாடு தழுவிய இயக்கமாக ஆகுமென்று அன்று யாரும் எதிர்பார்த்திட்டதில்லை. நீதிக் கட்சியின் பொதுச் செயலாளராக அண்ணா அவர்கள் இருந்ததால் கட்சி வளர்ந்திடவும் புதிய வேகம் கொண்டிடவும் புதிய குறிக்கோள் பெற்றிடவும் வழிமுறை காண வேண்டுமென்று அண்ணா அவர்கள் துடித்தார்கள். நீதிக் கட்சியில் இருந்த பெரும் தலைவர்கள் மாட மாளிகை, மல்லிகை மஞ்சம், கூட கோபுரம், 84