உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டி வந்த அருமை மனைவிக்கு- பத்மாவிற்கு மாதந்தோறும் திருவாருரூக்கு மணியார்டர் செய்து வந்தேன். எப்படியோ பிள்ளை சம்பாதிக்கிறான் என்று என்னைப் பெற்ற தாய்க்கும் தந்தைக்கும் உற்ற சகோதரிகளுக்கும் பெருமகிழ்ச்சிதான். கருணானந்தம், தவமணி, ஜனார்த்தனம் மூவரும் பெரியாரின் பழக்க வழக்கங்களில் மிகவும் ஒட்டிப் போனவர்கள். என்னால் அது முடியவில்லை. நாள்தோறும் அதுவும் காலையில் நான் குளித்து விடுவேன். தூய்மையான உடை அணிவேன். இது அந்த நண்பர்களால் கருதப்பட்டது. இதெல்லாம் பெரியாருக்கு விரோதமாகச் செய்கிற காரியங்கள் என்றுகூட அந்த நண்பரீகள் என்னை அடிக்கடி பயமுறுத்தினார்கள். ஒரு நாள் பெரியார் என்னைக் கேட்டேவிட்டார். பெரிய குற்றமாகக் "என்ன, குளிக்கிறாயா நீ? பிறகு எப்படி வேலை செய்வது?' என்பது தான் அவர் கேள்வி. குளிப்பதும் ஒரு வேலைதான். அதைக் காலையில் முதல் வேலை யாகச் செய்துவிட்டுப் பிற மற்ற வேலைகளையும் நான் கவனிக்கிறேன் அய்யா!” என்று பெரியாரிடம் சொன்னேன். அவருக்கு என்மீது ஏற்கெனவே ஏற்பட்டிருந்த தனிப்பட்ட அன்பினால் என் பதிலைப் பொறுத்துக் கொண்டார். காலை எட்டு மணிக்கெல்லாம் பெரியார் வீட்டில் அவர் முன்னால் அமர்ந்து -அன்று வருகிற தபால்களை அவர் பார்த்து அது பற்றிய விளக்கங்ளை அறிவித்து - அதனைச் செயல்படுத்துகிற வழிவகைகளை நாங்கள் தொடங்கிவிட வேண்டும். பிறகு அலுவலக வேலை. மாலையில் பெரியார் அலுவலகம் வருவார். அது வரையில் விழித்துக் கொண்டு, வேலை பார்த்துக்கொண்டிருக்கும் நண்பர் ஜனார்த்தனம் அப்போது தான் தூங்கிக் கொண்டிருப்பார். "இவன் எப்போதுமே தூங்குகிறானா?" என்பது பெரியாரின் ஆத்திரமான கேள்வியாக இருக்கும். 'குடியரசு' க்கான தலையங் கத்தை எழுதிவிட்டு - அதனை எங்களிடம் படித்துக் காட்டிவிட்டுப் பெரியார் அலுவலகத்தை விட்டுப் புறப்படுவார். ‘குடியரசு’க்குக் கரிவரதசாமி என்பவர் பெயரளவில் ஆசிரியராக இருந்தார். ஒவ்வொரு வாரக் 'குடியரசு தலையங்கத்தையும் படித்து முடித்துப் பெருமூச்சுவிட்ட பிறகுதான் அவருக்கு நிம்மதி. ஏனென்றால் பெரியார் ஏதாவது சட்ட விரோதமாகத் தலையங்கம் எழுதியிருந்தால் தன் தலைக்கல்லவா ஆபத்து என்ற பயம் அவருக்கு! 93