உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 நெஞ்சுக்கு நீதி ☐ சுழன்றடித்த வேகத்தில் கொட்டகை தடார் என விழுந்தது. அது விழுந்த வேகத்தில் ஒரு ஆயிரம் பேருடைய உயிரை யாவது குடித்திருக்க வேண்டும்! மின்னல் தாக்குதலினாலோ அல்லது எலக்ட்ரிஷியன், மெயின் போர்டை திடீரென வெட்டி விட்டதினாலேயோ மின் இணைப்புக் கம்பிகள் நல்லவேளையாக செயலற்றுப் போய்விட்டன. கொட்டகைக்குள்ளிருந்து ஆண்கள் பெண்கள் அலறல்! குழந்தைகளின் கதறல் ஒலி! மேடையில் இருந்த எங்களுக்கு என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. காரணம், எங்கள் மேடை மீதும் கொட்டகை விழுந்து கிடந்தது. சுமார் அரைமணி நேரம் பயங்கரமான சப்தங்கள் தான் கேட்டுக் கொண்டிருந்தன. என்னை ஒருவர் தூக்கிக்கொண்டு, கொட்டகையின் கீற்றுக்களைப் பிரித்துக் கொண்டு அவற்றின் மேல் நடப்பது தெரிந்தது. ஈரோடு சின்னச்சாமிதான் அவர் என்பது அவரது குரலில் இருந்து புரிந்தது. அவருக்கும் வழி தெரியாமல் அந்த இருட்டில் இரு வரும் சேர்ந்து ஒரு குழியில் விழுந்தோம். "அய்யோ மதி என்ன ஆனார்? சாதிக், முத்துசாமி எங்கே? ஆண்கள்,பெண்கள், குழந்தைகள் ஆயிரக்கணக்கில் கொட்ட கைக்குள் சிக்கியிருப்பார்களே! அவர்களுக்கு உதவி செய் யுங்கள்!" என்று தொண்டை வலிக்கக் கத்திக்கொண்டே இருந் தேன். அதற்குள்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் வெளிச்சம் விழா நடந்த கொட்டகையின் பக்கம் திருப்பப் பட்டது. கார்களில் இருந்த காரோட்டிகளும், பாதுகாப்புக்கு வந்த காவலர்களும், கழகத்தினரும் மீட்புப்பணியில் ஈடு பட்டனர்! மழையோ கொட்டிக்கொண்டிருக்கிறது! காற்று மட்டும் நின்றுவிட்டது! நான் உட்பட எல்லோருமே சிறு சிறு காயங்களுடன் தப்பிவிட்டோம்! அவ்வளவு பெரிய விபத்தில் ஒரு சிறு நகை நட்டுகூட யாருக்கும் காணாமற் போகாததும் பெரும் ஆச்சரிய மாக இருந்தது. என்னைக் காரில் கொண்டுபோய்ச் சேர்த்த சிறிது நேரத்திற்கெல்லாம் மற்ற அமைச்சர்களையும் கொண்டு வந்து சேர்த்தார்கள். அனைவருமே ஆபத்தின்றிப் பிழைத்து விட்டார்கள் என்ற போதிலும் நீண்ட நேரம் பொள்ளாச்சி மகாலிங்கத்தை மட்டும் காணவில்லை. இறுதியாக அவரையும் மேடையில் இருந்த ஒரு மேஜைக்கடியில் கண்டுபிடித்தார்கள். கிழிந்துபோன சட்டை