உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 எங்கிருந்தாலும் வாழ்க! தெய்வாதீனமாகத் தப்பிப் பிழைத்துக் கொண்டாய்" என்று எனது உறவினர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டு "ஆப்பக் கூடல் ஆபத்திலிருந்து காப்பாற்றிய ஆண்டவனே!" என்று நன்றியைப் பக்தி பூர்வமாகப் பொழிய ஆரம்பித்தனர். எத்தனையோ விபத்துச் செய்திகளைப் படிக்கிறோம். பார்க்கிறோம். ஒரு ரயில் கவிழ்ந்திருக்கும். சில நூறு பேர்கள் பிழைத்துக்கொள்வார்கள். பல நூறு பேர்கள் நசுங்கியும், மிதியுண்டும், உடல் நொறுங்கியும் பிணமாகியிருப்பார்கள், அப்போதும் தெய்வாதீனமாக அந்தச் சிலர் உயிர் தப்பியதாகச் சொல்லப்படுமே தவிர, பலர் உயிர் இழந்தது குறித்து "தெய்வாதீனம்" வாய் மூடி மௌனியாகவே இருந்து விடும். எத்தனை விமான விபத்துக்கள், எத்தனை பேருந்து விபத்துக்கள், எத்தனை புயல் வெள்ளச் சீற்றங்கள். எத்தனை எத்தனை கட்டிடம் இடிந்து விழுந்த விபத்துகள், எத்தனை திரையரங்குகள் தீக்கு இரையான விபத்துக்கள் - இவற்றில் எல்லாம் பலண் மடிந்திட நேரிட்டாலும் கூட, தப்பிப் பிழைத்த ஒரு சிலர் மட்டும் தெய்வாதீனமாக மீட்கப்பட்டனர் என்று கருதுவது அல்லது கூறுவது - அர்த்தமற்ற ஒரு நம்பிக்கை யாகவே தொடர்ந்து வருகிறது. அந்த நம்பிக்கைகளில் இருந்து எங்கள் வீட்டில் என் தாயார் உட்பட அனைவரும் விடுபட்டிருந்தாலுங்கூட, எனது பெரிய அக்காள் (அமிர்தத்தின் தாயார்) மட்டும் அழுத்தமான வைதீகப் பற்றுக் கொண்டவர். சகுனம் பார்க்காமல் அடுத்த தெருவுக்கு; ஏன் - அடுத்த வீட்டுக்குக்கூட அடியெடுத்து வைக்கமாட்டார். அவர்களது பிடிவாதமான சனாதனப் போக்கை யும் ஆச்சார அனுஷ்டானங்களையும் நான் ஏற்றுக்கொள்ளா விடினும் எதிர்க் கருத்துக்கள் எதனையும் அக்காளின் மனம் ண்படும்படி நான் கூறுவதில்லை. தெய்வம் உண்டா? இல்லையா? என்ற சர்ச்சையில்கூட எனக்கென ஒரு தனிக் கருத்து இருந்தாலும் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற திருமூலர் வாசகத்தை அறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கடி எடுத்துக்காட்டுவதும் - உண்மை