உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 நெஞ்சுக்கு நீதி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் ஆசிரியராகப் பணி யாற்றி, அந்தப் பல்கலைக்கழகத்திலேயே துணை வேந்தராகவும் பொறுப்பேற்ற அவர், ஒரு சிறந்த காந்தீயவாதியாகவும் விளங்கினார். அறிவும் - நிறைந்த அவர் மறைவை யொட்டி வானொலியில் உரையாற்றிய போது, "அடக்கத்தின் எடுத்துக்காட்டு- அன்பின் திருவுருவம், அமைதியின் வடிவம்-மறைந்த பெரியவர்! மறைந்தவருக்கு- விரிந்து பரந்த அறிவும் - நிறைந்த நாட்டுப்பற்றும் உண்டு. காந்தீயத் தத்துவத்தின் வழி நின்று கடமை ஆற்றிய கர்ம வீரர். கோபுரத்துக் கலசம் வீழ்ந்தது போல், குளிர் மலர்ச் சோலையில் குயிலின் கீதம் நின்றது போல் திடுக்கிடும் செய்தி நம்மைத் திகைப்பிலாழ்த்திவிட்டது. இந்து முஸ்லீம் ஒற்றுமையின் சின்னமாக விளங்கியவரை நாடு இழந்துவிட்டது. இன்று காலையில் தான் நாகாலந்து மக்க ளுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப் படம் ஏடுகளில் வெளி வரக் கண்டோம். நாளை ஏடுகள் அவரது உயிரற்ற உடலை யல்லவா படம் பிடித்துப் பிரசுரிக்கும்! பிறப்புக்கும் இறப்புக்குமி டையே மனிதன் ஆற்ற வேண்டிய கடமையை உணர்ந்து செய து லாற்றிய செம்மல் பிரிந்துவிட்டார். ஆனால் தமது அன்பு வழி யால் நம் உள்ளமெல்லாம் நிறைந்து விட்டார்..." என்று நான் குறிப்பிட்டேன். அவரது இறுதிப் பயணத்தின் போது தமிழக அரசின் சார்பில் நிதியமைச்சர் மதியழகன் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்தார். நாடாளுமன்றத் தி. மு. க. சார்பில் குழுத் தலைவர் பேராசிரியர் மற்றும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ஒரு குடியரசுத் தலைவரின் மறைவுக்கும் அடுத்த குடியரசுத் தலைவரின் வெற்றிக்குமிடையே இந்திய அரசியலில் எழுந்த மாற் றங்கள் வியப்புக்குரியவை. அதற்கிடையே தமிழக அமைச்சரவையில் ஒரு மாபெரும் இழப்பு ஏற்பட்டது, குடியரசுத் தலைவரின் மறைவுச் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்த போதே, தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் கோவிந்தசாமி அவர்கள், தலைமைச் செயலகத்தி லேயே இரத்த வாந்தியெடுத்து மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, அவர் அருகாமை