உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 128 கழக ஆதரவு பெற்ற உழைப்பாளர் கட்சி வேட்பாளராக 1952-ல் போட்டியிட்டு வென்றவர், காங்கிரசில் கரைந்து விட்டபோது, அதை ஏற்றுக் கொள்ளாமல் உழைப்பாளர் கட்சி கழகக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, கழகப் பொறுப்பாளர் பதவியையும் பெற்று 1957-ல் நடைபெற்ற தேர்தலில் வளவனூர் தொகுதியில் கழக வேட்பாளராகவே போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1962-ல் வெற்றி வாய்ப்பை இழந்த அவர் 1967-ல் வெற்றி பெற்று அண்ணா தலைமையிலான அமைச்சரவையில் ஒரு அமைச்சராகப் பொறுப்பேற்றார். இடைக்காலத்தில் அண்ணா அவர்களை எதிர்த்து காரணத்தாலோ கலகம் ஏ.ஜி ஈ.வெ.கி. சம்பத் அவர்கள் கட்சிக்குள்ளேயே விளைவித்த காலகட்டத்தில் என்ன அவர்கள் சம்பத் கோஷ்டியினர் விரித்த வலையில் விழுந்து விட்டார். 1960-1961-ஆம் ஆண்டுகளில் சம்பத் கோஷ்டியினர் அண்ணா மீது வீண் பழிகளைச் சுமத்தி விட்டுக் கட்சியை விட்டுப் பிரிந்து தமிழ் தேசியக் கட்சியென்ற தொடங்கிய போது அந்த நிலையை ஏற்றுக் கொள்ள முடியாதென புதுக் கட்சியைத் அறவே மறுத்து விட்டார் ஏ. ஜி. இருந்தபோதிலும் இடையில் அந்தச் சில ஆண்டுகள், அவர் சம்பத்துக்கு ஆதரவாக இருந்த நிலையை நானும் கழக முன்னணியினர் பலரும் விரும்பவில்லை. அதன் காரணமான் எனது ஆருயிர் நண்பர் கடலூர் இளம்வழுதி அவர்கள் ஏ. ஜி. அவர்களுடன் கடுமையான பகையே கொண்டிருந்தார். கடலூர் வட்டாரத்தில் இளம்வழுதி கழகத்தின் காவல் அரணாகத் திகழ்ந்த காலம் அது. தனது அறிவால் ஆற்றலால் அயராத உழைப்பால் எண்ணற்ற இளைஞர்களைக் கழகத்தில் இணைத்த இளம்வழுதியும்-இளமை தொட்டு வீறு கொண்ட வீரனாக நடை பயின்று மக்கள் மனத்தில் நல்லதோர் இடம் கழக பெற்ற நெல்லிக் குப்பம் கிருஷ்ணமூர்த்தியும் சிற்சில விஷயங் களில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் என்றாலும், ஏ. ஜி. அவர்கள் சம்பத்த ன் பக்கம் சற்று சாய்கிறார் என்பதிலே ஒரே அணியில் இருந்து அவரை எதிர்த்தார்கள். அதன் காரணமாக இளம்வழுதி - ஏ. ஜி. இருவரின் மனக் கசப்பும், பகையும் வளர்ந்து கொண்டேயிருந்தது. ஏ.ஜி சம்பத், கழகத்தைவிட்டு வெளியேறிய பிறகு, ஏ. ஜி அவர்கள் அண்ணாவின் தலைமையில் உறுதியாக நின்றுவிட்ட தைச் சுட்டிக்காட்டி, இளம்வழுதியைச் சமாதானப்படுத்த நான்