உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 131 வேட்பாளர் சண்முகசுந்தரம் 7,579 வாக்குகள் அதிகமாகப் பெற்று காங்கிரஸ் வேட்பாளரைத் தோற்கடித்தார். தோற்கடித்தார். 67-ஆம் ஆண்டு தேர்தலில் 3,130 வாக்குகள் வித்தியாசத்தில்தான் அந்தத் தொகுதியில் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றி ருந்தார். பரம்பிக்குளம் ஆளியாறு திட்டம் குறித்து கேரள அரசோடு கழக அரசு செய்துகொண்ட ஒப்பந்தம் தவறு என்று இடைத்தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்தார்களே, காங்கிரசார், அது குறித்து சிலவற்றைக் கூற விரும்புகிறேன். தமிழ்நாடு அரசிற்கும் கேரள அரசிற்கும் இடையே நதி நீர் பங்கீடு குறித்து ஆராய்ந்து தீர்வுகாண இரு மாநிலங்களின் மாநாடு 10-5-69 அன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது, இதில் தமிழக அரசின் சார்பாக நான், நிதியமைச்சராக இருந்த மதியழகன், பொதுப்பணி அமைச்சராக இருந்த சாதிக் ஆகியோரும், கேரள அரசின் சார்பில் முதலமைச்சராக இருந்த நம்பூதிரிபாத், பாசனத்துறை அமைச்சராக இருந்த பி.ஆர். குரூப், மின்துறை அமைச்சராக இருந்த எம். என். கோவிந்தன் ஆகியோரும் கலந்து கொண்டோம். மாநாட்டிற்கு மத்திய பாசன மின்விசைத் துறை அமைச்சர் டாக்டர் கே. எல். ராவ் தலைமை வகித்தார். மாநாட்டின் முடிவில் பரம்பிக்குளம் ஆளியாறு திட்டம், பவானி திட்டம், பம்பார் படுகை. கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி திட்டம், கபினி ஆறு ஆகியவற்றின் தண்ணீரைப் பங்கீடு செய்து கொள்வது பற்றி ஒரு ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பில் நானும், கேரள அரசின் சார்பில் ஈ. எம். எஸ். அவர்களும், மத்திய அரசின் அமைச்சர் கே. எல். ராவ் ஆகியோரும் கையெழுத்திட்டோம். ஒப்பந்தம் பற்றி செய்தியாளர்கள் என்னிடம் கேட்ட போது, "ஏறத்தாழ அறுபது கோடியிலிருந்து எழுபது கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட பரம்பிக்குளம் ஆளியாறு திட்டத்தால் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட ஏக்கரா நிலம் பாசன வசதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் தொடங்கப்பட்ட வேலைக்கு ஐம்பது கோடிக்கு நெருக்கமாக செலவழித்திருந்து கூட தமிழக அரசுக்கும் கேரள அரசுக்குமிடையே பேச்சு வார்த்தைகள் நிறைவு பெறாததால் ஒரு லட்சம் ஏக்கரா அளவே பயனடைய முடிந்தது. நீராறு பிரச்சினை தீராத பிரச்சினையாக இருந்தது. இப்போது ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி மேலும்