உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 நெஞ்சுக்கு நீதி □ உடனே அமைச்சர்கள் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு அதன் பின்னர் காமராஜர் அதற்குப் பதில் எதுவும் கூறாமலே இருந்துவிட்டார். எந்த அமைச்சருக்கு அப்படி வழங்கப்பட்ட.து என்று சொன்னால் நான் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என்று அப்போதே குறிப்பிட்டேன். அதற்கும் திரு. காமராஜர் அவர்கள் பதில் அளிக்கவில்லை. மகாலிங்கம் அவர்களும் காமராஜர் மீது வழக்கு ஒன்றைத் தொடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இந்த விவகாரம் குறித்து பேசுவதற்காகத்தான் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூடியது. விவாதம் முற்றி குழப்பம் அதிகரித்தது. மகாலிங்கத்தின் மீது நடவடிக்கை எடுத்து அவரைக் கட்சியை விட்டு அறவே நீக்க வேண்டுமென்று காமராஜரின் ஆதரவாளர்கள் குறிப்பிட் டார்கள். அறவே நீக்க வேண்டாம், இரண்டு வருடத்திற்கு கட்சியை விட்டு அவரைத் தள்ளி வைக்கலாம் என்று காமராஜர் அவர்கள் கூறினார். குழப்பமான சூழ்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக அப்போதிருந்த சி. சுப்பிரமணியம் அவர்கள் ஒரு துண்டு அறிக்கையை அந்தச் செயற்குழுக் கூட்டத்தில் விநியோகம் செய்தார். அந்த அறிக்கையில் கண்டிருந்த வாசகங்கள் ஆவன : "பொதுத் தேர்தல் முடிந்தவுடன் எனக்கு பெரும் பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு இருந்தது. உள்நாட்டிலோ, வெளி நாட்டிலோ நான் பெரிய பதவியில் அமர்ந்திருக்க முடியும். ஆனால் அனைத்தையும் வேண்டாமென்று உதறிவிட்டு தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியை வளர்க்கின்ற பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். தமிழ்நாடு காங்கிரசில் காமராஜர் குழு ஒன்று இருப்பது எனக்குத் தெரியும். அவருக்கு எதிரான குழு ஒன்று இருப்பதும் எனக்குத் தெரியும். அந்த இரு குழுக்களிலும் சேராமல் நடு நிலையில் இருந்து பணியாற்ற நான் விரும்பினேன். காங்கிரஸ் வளரவேண்டும் என்பதற்கான நல்ல எண்ணத் தோடு பாடுபட்டேன். நான் தலைமைப் பொறுப்பை ஏற்றது முதல் காமராஜரைக் கலந்தே ஒவ்வொரு காரியத்தையும் செய்து வருகிறேன். ஆனால் அவருடைய நண்பர்கள் என் மீது குற்றம் சொல்லிக்கொண்டே வருகிறார்கள். 3- ஆம் தேதி நவசக்தி 10