உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி- 149 அவர்களில் பெரும்பாலோர் நாவலர் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள். ஆனால் என்னுடைய எண்ணத்தை ஏற்றுக்கொண்டு நண் பர்கள் மதுரை முத்து, மன்னை நாராயணசாமி, அன்பில் தர்மலிங் கம், திருவண்ணாமலை தர்மலிங்கம், தூத்துக்குடி சிவசாமி ஆகியோர் ஒரு சமரசத் திட்டத்தை உருவாக்கினார்கள். அந்த சமரசத் திட்டத்தின்படி கழகச் சட்ட திட்டத்தில் ஒரு மாற்றம் செய்வது என்று தீர்மானிக்கப் பட்டது. அதுகுறித்து நாவலரின் கருத்தை அறிய அவர்களை நான் அனுப்பி வைத்தேன். கழக சட்டதிட்டத்தில் பொதுச்செயலாளருக்கு என்று அவர் ஆற்றவேண்டிய பணிகள், பொறுப்புகள் குறித்து தொடர் பாகப் பல பிரிவுகளும், தனித் தனியாகப் பல பிரிவுகளும் இருக் கின்றன. அவைகளை அப்படியே வைத்துக்கொண்டு-அவைத் தலைவர் என்பதை தலைவர் என்று மாற்றிக்கொண்டு, பொதுச் செயலாளர் நிறைவேற்றவேண்டிய பணிகளுக்கு-தலைவரைக் கலந்து பேசி இருவரும் சேர்ந்து முடிவு மேற்கொண்ட பிறகுதான் அவற்றை நிறைவேற்றவேண்டும் என்ற கருத்தில் சில பொறுப் புக்களைத் தலைவர் பதவிக்கு அளித்து-இவ்வண்ணம் 26-7-69-இல் நடைபெறும் பழைய பொதுக்குழுவில் சட்டதிட்ட திருத்தத்தைக் கொண்டுவருவது என்றும், அதன்படி 27-7-69-இல் நடைபெறும் தலைமைக்கழகத் தேர்தலில் தலைவர் பதவிக்கு என்னையும் பொதுச்செயலாளர் பதவிக்கு நாவலர் நெடுஞ்செழியன் அவர் களையும் தேர்ந்தெடுப்பது என்பதும்தான் அந்த சமரசத் திட்டம். முதலில் அறிவிக்கப்பட்டவாறு 26-7-69 காலை பழைய செயற்குழு, பொதுக்குழு சென்னை ராஜேஸ்வரி திருமண மண்ட பத்தில் கூடியது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பு நானும், நாவலரும் அந்தக் கட்டிடத்திலேயே ஒரு இடத்தில் தனியாகச் சந்தித்துப் பேசினோம். பத்து நிமிட நேரம் நாங்கள் தனியாகச் சந்தித்துப் பேசியவுடன் இருவர் மனதிலும் இருந்த கருத்து வேறு பாடுகள் கதிர்பட்ட பனிபோல விலகின. சமரசத் திட்டத்தை இருவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டோம் என்று தெரிவித்த தும் நாங்கள் இருந்த அறைக்குள் ஓடிவந்து அன்பிலும், மன்னை யும், மதுரை முத்துவும் மற்றும் கழக முன்னணியினரும் எங்கள் இருவரையும் கட்டித் தழுவிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.