உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி D187 விளம்பரப்படுத்தப்பட்ட சில நிகழ்ச்சிகளில் கூட என்னுடன் அவரால் கலந்துகொள்ள இயலவில்லை. அதற்காக நானோ என்னைச் சார்ந்தவர்களோ அவர் மீது வருத்தம் கொள்வதில்லை. என்னையும் மீறி ஒரு வேளை வருத்தம் என் நெஞ்சைத் தொடுமே யானால் அதனை விரட்டியடிக்க அடிகளார் அப்பொழுது எழுதிய இந்தக் கவிதையை அடிக்கடி எடுத்து நான் படித்துக் கொள்வது வழக்கம். அவர்கள் அடிகளார் நியமனத்தையும் திரு.நெ.து.சுந்தரவடிவேலு சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டதையும் பாராட்டுகின்ற வகையில் சென்னையில் ஆகஸ்ட் 27-ஆம் நாள் தர்மபுரம் ஆதீனத்தின் சார்பில் ஒரு விழா நடைபெற்றது. அந்த விழாவில் நானும் கலந்து கொண்டேன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு கே. வீராசாமி அவர்கள் "நமது முதல்வர் ஒரு சாதுவை சட்டமன்றத்திலே கொண்டு வந்து நிறுத்தியிருக் கிறார். அவர் செய்துள்ளது எங்கும் காணாத போற்றத் தகுந்த ஒரு புதுமை. தமிழ்நாடு அரசு எத்தனையோ விஷயங்களில் வேறு யாரும் செய்யாத பல சாதனைகளைச் செய்திருக்கிறது. சமீபகாலத் தில் அடிகளாரை மேலவை உறுப்பினராக ஆக்கியது அந்தச் தனை களில் ஒன்று" எனக் கூறினார். நீதிபதி கைலாசம் அவர்களின் துணைவியார் திருமதி செளந் தரா கைலாசம் தமிழ்ப்புலமை மிக்கவர். அவர் அந்த விழாவில் பேசும் போது, "அண்மைக் காலத்தில் நாளேடுகளைப் புரட்டினால் மனதை நெகிழச் செய்யும் நல்ல பல செய்திகள் வந்தபடியே இருக் கின்றன. நாமக்கல் கவிஞரையும், பரலி சு. நெல்லையப்பரையும் பாராட்டி அரசு உதவிட முன்வந்த செய்தியினைப் படித்தபோது என் கண்கள் பனித்தன. வாழ்க என்று என் வாயும் மனமும் வாழ்த்தின. வள்ளியம்மைக்கு மணிமண்டபம் கட்டி நினைவுச் சின்னம் எழுப்பும் செய்தியைப் படித்துப் பரவசமடைந்தேன் கண்ணில் ஆனந்தக் கண்ணீர் வற்றிக் காயுமுன் மறுபடியும் ஒரு நல்ல செய்தி! துறவியர் பெருமான், மேலவை உறுப்பினராகிறார் என்று வந்தது. உள்ளத்துக்கு மகிழ்ச்சி அளிக்கத்தக்க இப்படி எத்தனையோ செய்திகள்! நமது முதல்வர் ஓங்கி உலகளந்த வாமனனைப்போல அடியெடுத்து வைத்து எங்கே பாரதத்துக்குப் போய்விடுவாரோ? தமிழ்நாட்டில் அவரது கவனம் குறைந்து விடுமோ? என்று எண்ணும்படியான நிகழ்ச்சிகளும் செய்திகளும்