உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 நெஞ்சுக்கு நீதி 'இது கலைஞருடைய வரலாறு என்பதை விட முப்பத்தைந்து ஆண்டு காலத் தமிழக அரசியல் வரலாற்றையே அவர் தெளிவாக நமக்குத் தந்திருக்கிறார். வரலாறு எழுதுவதற்கும் தகுதி வேண்டும். திறமை வேண்டும். மக்களுடைய இதயத்தில் குடியேறியவர்கள் யாரோ, அவர்கள் எழுதுகிற வாழ்க்கை வரலாற்றைத்தான் மக்கள் படிக்க விரும்புகிறார்கள். "நெஞ்சுக்கு நீதி" நூலில் அவருடைய வரலாறு என்பது மிகவும் குறைவு! இயக்கத்தோடு நெருங்கிச் சேர்ந்து வளர்ந்ததாலே இயக்கத்தின் வரலாறுதான் அவருடைய வரலாறே தவிர அவருக்கென்று தனித்த வரலாறு இல்லை. நாவலர் அவர்கள் இடம் மாறினாலும் அவர் கூறிய அந்தக் கருத்து என் இதயத்தைவிட்டு மாறவில்லை. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேராசிரியர் அன்பழகன் அவர்கள், "கலைஞர் அவர்கள் தன்னுடைய வரலாறு என்று எண்ணிக் கொண்டு எழுதினாலும் அது இந்த நாட்டின் வரலாறாக, மொழியின் வரலாறாக இருக்கிறது. அவருடைய வரலாறு ஒரு தனி வரலாறாக இருக்க முடியாத நிலை பெற்று, ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டு காலமாகிறது" எனக் குறிப்பிட்டதையும் மறந்துவிடாத என்னைச் சுமந்து கொண்டுதான் காலத்தேர் ஓடிக்கொண்டிருக்கிறது. பாகம் 1975-ஆம் ஆண்டு "நெஞ்சுக்கு நீதி "யின் முதல் வெளியிடப்பட்டது. என்னுடைய ஐம்பதாவது வயது நிறைவுற்ற கட்டத்தில்தான் அந்த வெளியீட்டு விழா நடைபெற்றது.! நாற்பத்து ஐந்தாவது வயதில் தமிழக முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளான நான்; அந்தப் பொறுப்பேற்ற செய்தியுடன் முதல் பாகத்திற்கு "முற்றிற்று" என்ற முத்திரையைக் குத்தியிருந்தேன். அதற்குப் பிறகு பதினைந்து ஆண்டு காலம் உருண்டோடியிருக்கிறது. இதோ இன்னும் பதினைந்து நாட்களில் ஜூன் மூன்றாம் நாள் (1983) அறுபதாம் அகவையில் அடியெடுத்து வைக்கிறேன். இனி நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் என்னைப் பொறுத்தவரையில் கல்லறையை நோக்கித்தான் என்றாலும், நான் ஒவ்வொரு அங்குலம் நகரும்போதும் இந்தச் சமுதாயம் குன்றின் மேலிட்ட விளக்காக ஒளி விடுவதற்கான உழைப்பையே வழங்குவதற்கு உறுதிபூண்டிருக்கிறேன். துளி வியர்வை சிந்திடினும்