உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 241 திரு. கருணாநிதி அவர்களின் புதிய கருத்துக்கள் பழைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரிவினைக் கொள்கையின் மறு உருவமே என்று வாதிப்பவர்கள் இதைத் தவறாகப் புரிந்து கொண்டவர்களாவார்கள். இந்தக் கருத்துக்களை விரும்பாதவர்கள் கூட இன்றைய அகில இந்திய அரசியல் சூழ்நிலையில் திரு. கருணாநிதி அவர்கள் முக்கியத்துவம் பெற்று வளர்ந்து வரும் ஒரு வரும் ஒரு அரசியல் சக்தி என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும். ஒரு தலைவருக்குரிய ஆற்றலும் திறமையும் பெற்றவராக அண்ணா அவர்கள் இருந்தாரென்றாலும், அவரிடம் சில அமைதித் தன்மைகளும் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மைகளும் இருந்தன. இதற்கு மாறாக திரு. கருணாநிதி துடிப்புடன், புதுத் திட்டங்களுடன் பெரிய குறிக்கோள்களுடன் தன்னம்பிக்கை யுடன் செயல்படுகிறார். இதற்கு முன்னர், தான் முதலமைச்சராக வருவதற்கு முன்னால் டெல்லி பக்கம் வந்திருப்பாரோ இல்லையோ என்று கருதப்படும் திரு. கருணாநிதியின் அரசியல் செல்வாக்கு அவர் முதலமைச்சராகும் வரை தமிழகத்தின் எல்லையைத் தாண்ட வில்லை. ஆனால் இன்று அவர் அகாலிக் கட்சியுடன் குறிப்பிடத் தக்க அளவுக்கு சிறந்த தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருக் கிறார். அடுத்து வரும் பத்தாண்டுகளில் அரசியல் உலகத்தின் கவனத்தைத் தன்பால் இழுக்கக்கூடிய தலைவராக திரு. கருணாநிதி இருப்பார்." இவ்வாறு "இந்துஸ்தான் டைம்ஸ்" ஏடு எழுதியதை யொட்டியே - உலகப் புகழ்பெற்ற ஆங்கில ஏடான "சங்கர்ஸ்- வீக்லி' ஒரு கட்டுரை தீட்டியிருந்தது. "மாநில சுயாட்சி-மத்தி யில் கூட்டாட்சி" என்ற கோஷத்தை நான் எழுப்பிய பிறகு, இந்த வார மனிதர்" என்று தலைப்பிட்டு அந்த ஏட்டில் எழுதப்பட்டிருந்த கருத்துக்களை நான் நினைவூட்ட விரும்புவது; என்னைப் புகழ்ந்துரைத்துள்ளது என்பதற்காக அல்ல; கழகத்தின் சார்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதம் எவ்வளவு வலுவானது என்பதையும்-கழகத்தின் கொள்கை, எதிர்காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் என்பதையும் அப்பொழுதே பிரபல பத்திரிகைகள் உணர்ந்து அறிவித்தன என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான்! மிக