உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 249 தமிழ்நாட்டு அமைச்சர்களின் சிறப்பியல்பு என்னவெனில் அவர்கள் ஒரு குரலில் பேசுகிறார்கள் என்பதுதான். ஒரு அமைச்சர் மற்றவரின் கருத்துக்களுக்கு மாறாகப் பேசினார் என்பதோ-மாறுபட்ட நிலையை மேற்கொண்டார் என்பதோ இங்கு கிடையாது." 1953-ஆம் ஆண்டில் திருப்பத்தூருக்கு அருகில் ஏற்பட்ட கார் விபத்தின் காரணமாக என்னுடைய இடது கண்ணில் பலத்த அடிபட்டு அதனையொட்டி இடது கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தேன். பின்னர் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது 1967-ஆம் ஆண்டு தஞ்சைக்குச் செல்லும் வழியில் மறுபடியும் கார் விபத்திற்கு ஆளாகி அறுவை சிகிச்சை செய்துகொண்ட அதே இடது கண்ணில் மீண்டும் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து அந்தக் கண்ணில் அடிக்கடி தொல்லை இருந்து கொண்டே வந்தது. அந்தக் கண்ணில் 1970-ஆம் ஆண்டு மறுபடியும் வலியும் வீக்கமும் ஏற்பட்டது. அதனுடன் பெருந்துறை தொகுதி இடைத் தேர்தல், மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவிட்டு, ஏப்ரல் மாதம் 23-ந் தேதி அன்று சட்டமன்ற மேலவைத் தேர்தல் நடந்தபோது, அதன் தலைவராக சிந்தனைச் சிற்பி சி. பி. சிற்றரசு அவர்களை அமரச் செய்து, அவரைப் பாராட்டி உரையாற்றிய பிறகு இடது கண்ணில் தொந்தரவு அதிகமாகவே, சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். கண் மருத்துவர் டாக்டர் ஆப்ரகாம் அவர்கள் எனக்கு சிகிச்சை அளித்தார். ஏப்ரல் 28-ந்தேதி மாலை 6 மணி அளவில் கண்ணில் சிறிய தொரு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதற்குப் பிறகு மே மாதம் 2-ந் தேதி அன்று குடியரசுத் தலைவர் கிரி அவர்கள் கண் மருத்துவ மனைக்கு வந்திருந்து விரைவில் நான் நலம் பெற வேண்டுமென்ற விழைவினைத் தெரிவித்தார். கண் மருத்துவமனையில் நான் இவ்வாறு அவதிக்கு உட் பட்ட நிலையில் இருந்தபோது நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் பணிபுரிந்த 16,000 தொழிலாளர்கள் மே 3-ந்தேதி முதல் திடீர் வேலை நிறுத்தம் செய்யத் தொடங்கினர். தொழிலாள |களுக்கும், காவலர்களுக்கு மிடையே மோதல் ஏற்பட்டு துப்பாக்கிட் பிரயோகம் வரை நடந்தது.