உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 நெஞ்சுக்கு நீதி ☐ அளிக்கப்படுவதைத் தடுத்த சட்டம் அரசியல் சட்டத்திற்கு கூறப்பட்டது. மன்னர்களுக்குரிய மானியங்களையும், குடியரசுத் தலைவரின் குடியரசுத் தலைவரின் அ விரோதமானது" என்று தீர்ப்பு உரிமைகளையும், சலுகைகளையும் இந்த அவசரச் சட்டத்துக்கு முன்னர் இருந்ததுபோல் அரசு தர வேண்டும் என்று தலைமை நீதிபதி உட்பட ஒன்பது நீதிபதிகள் தீர்ப்பு கூறினர். 6 அந்தத் தீர்ப்பு பற்றிய என்னுடைய கருத்தை செய்தி யாளர்கள் கேட்டபோது "சோஷலிசத்தை நோக்கி நாடு சென்றிட வேண்டுமென்று கருதுகிற கொள்கையுடையவர் யாரும் இந்தச் செய்தி கேட்டு மகிழ்ச்சியடைய முடியாது. அப்படி மகிழ்ச்சி அடைகிறவர்களை ரசிக்கவும் முடியாது. மன்னர் மானிய ரத்துக்கான தேவைப்படும் அரசியல் சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் தி. மு. கழகத்தின் ஆசை" என்று கூறினேன். தீர்ப்பையொட்டி நாடாளுமன்ற மக்களவையில் பெருத்த விவாதம் நடைபெற்றது. அதற்கு பதிலளித்த பிரதமர் இந்திரா ராஜமானிய ஒழிப்புக் கொள்கையில் அரசாங்கம் தொடர்ந்து உறுதியாயிருக்கிறது. அதைத் தக்க அரசியல் சட்ட வழி வகைகள் மூலம் நிறைவேற்றியே தீரும் என்பதே நான் இப்போது அவைக்குத் தரக்கூடிய உறுதி" என்று கூறினார். மன்னர் மானிய ஒழிப்பு ரத்து உத்தரவு செல்லாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்ததையொட்டி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு இடைக்காலத் தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் இந்திய அரசியல் அரங்கில் தோன்றியது. அந்தச் சந்தேகத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் நாடாளுமன்ற மக்களவை டிசம்பர் 28-ஆம் தேதி கலைக்கப்பட்டு-மறு தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப் பட்டது. அதுபற்றி ராஜாஜி, ஜெகஜீவன்ராம், நிஜலிங்கப்பா ஆகியோர் வானொலியில் கருத்து தெரிவித்ததையொட்டி, என்னிடம் கருத்து வானொலி சார்பில் கேட்டபோது "இப்போது பிரச்சினை மக்கள் கைக்கே வந்திருக்கிறது. தங்களுடையவும். தங்களது சந்ததியினருடையதுமான வருங்காலத்தை மக்கள் தீர்மானிக்க வேண்டியவர்களாக இருக்கிார்கள். அண்மையில்