உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அமைச்சரவையில் எம்.ஜி.ஆர்? 1971 மார்ச் 1, மார்ச் 4, மார்ச் 7 என்று மூன்று கட்டங் களாகப் பிரிக்கப்பட்டு தேர்தல் நாட்கள் அறிவிக்கப்பட்டிருந் தன. எப்படியும் முற்போக்குக் கூட்டணியைத் தோல்வியடையச் செய்ய வேண்டுமென்று சபதம் மேற்கொண்டு ராஜாஜி அவர் களும், காமராஜர் அவர்களும் இணைந்து நின்று செயல்பட் டார்கள். சென்னைக் கடற்கரையில் மிகப்பெரிய கூட்டமொன்றில் அந்த இரண்டு பெருந்தலைவர்களும் கலந்து கொண்டு ஆற்றிய உரையில் கழகத்தையும், கழகத்தின் தோழமைக் கட்சிகளையும் கடுமையாகத் தாக்கினார்கள். 1967-இல் காமராஜரும் காங்கிரசும் தோற்கடிக்கப்பட வேண்டுமென்று முழுமூச்சுடன் பணியாற்றியும், எழுதியும், பேசியும் உலாவந்த ராஜாஜி அவர்கள், சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் காமராஜருக்குக் குங்குமத் திலகமிட்டு ஆசி வழங் கினார். அந்தப் படம் எல்லா நாளேடுகளிலும் வெளி வந்தது அவர்களது கூட்டணிக்கு ஜனநாயக முன்னணி என்று பெயர் கழக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியே தீருவேன் என்று காங் கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கும், ஜனநாயக முன்னணி யின் தேர்தல் பிரச்சாரத்திற்கும் புறப்பட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் திருத்தணி முருகன் கோயிலுக்குச் சென்று கையில் ஒரு வேலுடன் ஆவேசமாகக் கிளம்பினார். தினமணி, எக்ஸ்பிரஸ், இந்து ஆகிய ஏடுகள் நாள்தோறும் எல்லாப் பக்கங்களிலும் கழகக் கூட்டணிக்கு எதிரான பிரச்சாரத் திலேயே ஈடுபட்டிருந்தன. கழகத் தலைமையில் முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரமும் விறுவிறுப்புடன் ஆரம்பமானது. தி.மு.கழகம் பிரிவினைவாத இயக்கம் என்றும் அதனுடன் உடன்பாடு கொள்ளலாமா என்றும் பிரதமர் இந்திரா காந்தியை நிருபர்கள் கேட்டபோது, அந்தக் கட்சி பிரிவினைக் கொள்கையைக் கை