உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 நெஞ்சுக்கு நீதி பிற்காலத்தில் அதனால் ஏற்பட்ட விளைவுகள் எவ்வளவு விபரீதமானவைகள் என்பதை நான் விளக்கத் தேவையில்லை. தமிழகத்தில் கழகம் பெற்ற மகத்தான வெற்றி குறித்து, டெல்லியிலிருந்து வெளிவரும் "லிங்க்" என்ற ஆங்கில ஏடு, பின்வருமாறு எழுதியது :- "பிரமாதமான முறையில் மீண்டும் ஆட்சியைப் பிடித்திடு வோமென்று வலதுசாரி சக்திகளின் கூட்டு பெரிய நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருந்த மாநிலம் தமிழ்நாடு. ராஜாஜியும், காமராசரும் கூட்டுச் சேர்ந்தால் அது வெல்லற்கரிய மாபெரும் சக்தி என்பதாக ஒரு மாயை மிகக் கவர்ச்சிகரமாகக் கட்டி வளர்க்கப்பட்டது. ஆனால் தமிழகத்து மக்கள் வேறுவகை சிந்தனை உடையவர்களாக இருந்தனர். அந்தக் கூட்டுக்கு இத் தேர்தலில் அவர்கள் கொடுத்துள்ள சாட்டையடியிலிருந்து அவர் கள் மீண்டும் எழுவதென்பது இயலாத காரியம். நாடாளுமன்ற தேர்தலோடு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல்களையும் நடத்திடுவதென்று கருணாநிதி தீர்மானித்தபோது மந்த புத்தி அரசியல் பண்டிதர்கள், இது சிக்கலான சோதனை என்று கூறினர். ஒரு ஆனால் முற்போக்கு அணியின் பிரகாசமான வெற்றியும் சிண்டிகேட் சுதந்திரா கூட்டுக் கும்பலின் கேவலமான தோல்வி யும், ஊக்கமிக்கவரும் திரைக்காவிய கர்த்தாவுமான தி.மு.கழகத் தலைவர் கருணாநிதி, ராஜகோபாலாச்சாரியார், காமராசர் ஆகி யோரைக் காட்டிலும் நுண்திறன் வாய்ந்த அரசியல் தந்திரமிக்க வர் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளது. தமிழகத்தில் இயங்கும் ஏக போக ஏடுகள் தங்கள் முழு ஆத்திரத்தையும் தி. மு. கழகத்தை வலிந்து தாக்கி பிரச்சார இயக்கம் நடத்தின. இதனால் எல்லாம் தி. மு. கழகம் அரசை விட்டு அகலும் என்ற கருத்தை ராஜாஜி, காமராஜர் கூட்டத் தினரால் உருவாக்க முடிந்ததற்கும் அந்த ஏடுகளே காரணம். சுதந்திராவும், சிண்டிகேட்டும் அடைந்துள்ள படுதோல்வி உண்மையிலேயே அவமானகரமானது.' 99 மீண்டும் முதல்வர் பதவியேற்றவுடன் 16-3-71 வானாலிெ யில் நான் ஆற்றிய உரையை இங்கு தினைவுபடுத்துவது தேவை யான ஒன்றாகும்.