உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 மதுரையில் ஒரு விழா! இந்தியாவிலேயே முதன் முதலாகக் கழக ஆட்சியில் தான் மாநிலத் திட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு, 1971-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கப் பெற்றது. அந்தக் குழுவுக்குத் தலைவராக மாநில முதலமைச்சர் இருப்பதென்றும், திட்டக்குழுவின் துணைத்தலைவராக தலைமைச் செயலாளர் நிலையில் உள்ள ஒரு முழுநேர அலுவலரை நியமிப்பது என்றும் முடிவு மேற்கொள்ளப்பட்டு, அந்தப் பதவிக்கு அப்போது தலைமைச் செயலாளராக இருந்த இ.பி. ராயப்பா அவர்கள் நியமிக்கப்பட்டார். வருவாய் வாரியத் துறை முதல் உறுப்பினராக இருந்தவரும், மின்வாரியத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தவருமான பி. சபர்நாயகம் அவர்கள், தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த மாற்றங்கள்யொட்டி, போலீஸ் ஐ.ஜி.யாக இருந்த ஆர். எம்.மகாதேவன் அவர்கள் லஞ்ச ஊழல் ஒழிப்பு டைரக்ட ராகவும், மத்திய புலன் விசாரணைப் பிரிவில் டைரக்டராக இருந்த எப்.வி. அருள் அவர்கள் ஐ.ஜி.யாகவும் நியமிக்கப் பட்டனர். இந்தப் பதவி மாற்றங்களுக்குப் பிறகு மதுரை மாநகரில் நகராட்சி மன்றம், மாநகராட்சி மன்றமாக மாற்றம் பெற்ற நிகழ்ச்சியும் தொடர்ந்தது. நகராட்சி மன்ற உறுப்பினர்களே, மாநகராட்சி மன்ற உறுப்பினர்களாகும் தகுதி பெற்றனர். இந்த நிலையை, அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றிருந்த கல்வி அமைச்சர் நாவலர், ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ளத் தயக்கம் காட்டினார். ஆனால், நான் அதற் குரிய காரணங்களைக் கூறி, நகராட்சி மாநகராட்சியாகும் போது நகராட்சி உறுப்பினர்கள் மாநகராட்சி உறுப்பினர்களாகும் தகுதி பெறுவதில் தவறில்லை என வாதிட்டேன். அமைச்சரவையினரின் ஒப்புதலையும் பெற்று 1971 மே திங்கள் முதல் நாள் மதுரை மாநகராட்சி தொடக்க விழா மகிழ்ச்சிப் பெருக்குடன் நடை பெற்றது. நாவலர் தலைமையில் மாநகராட்சி மன்றத்தை நான் தொடங்கி வைத்தேன். நகராட்சியின் தலைவராக இருந்த மதுரை முத்து நண்பர்