உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 305 ☐ 51-வது பிறந்தநாளின் போதுதான் ஊனமுற்றோர் நல்வாழ்வுத் திட்டம் உருப்பெற்றது. ஊனமுற்றோருக்கான உதவிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அதுவரையில் செய்யப்பட்டன என்றாலுங்கூட அதனை அரசாங்க அளவில் பெரிய திட்டமாக வகுத்துப் பரவலாக நடைமுறைப்படுத்திய பணி அப்போதுதான் ஆரம்பமாயிற்று. மாமல்லபுரம் செல்லும் பாதை யில் முட்டுக்காடு (முத்துக்காடு) என்னும் இடத்தில் ஒரு தெ சாலை நிறுவப்பட்டு, அதில் ஊனமுற்றோர் தொழில்ப பெறவும் - அப்படிப் பயிற்சி பெறும்போதே அந்தத் சாலையில் உற்பத்தி நடக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தத தொழிற்கூடத்தில் மட்டுமல்லாது அரசின் பல்வேறு தொழிற் கூடங்களில் ஊனமுற்றோருக்கு ஏற்றவகையில் தொழில் பயிற்சி களும் அளிக்கப்பட வசதிகள் செய்யப்பட்டன. ஊனமுற்றோர் ஆயிரக்கணக்கானவர்களுக்கு சக்கர நாற்காலிகள் இலவசமாக வழங்கப்பட்டன. மூன்று சக்கர சைக்கிள்களும் அளிக்கப் பட்டன. ஊனமுற்ற சிறுவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளும் திறக்கப்பட்டன. காது கேட்காத பள்ளிச் சிறார்கள் ஆயிரக் கணக்கானவர்களுக்கு காது கேட்கும் கருவிகள் இலவசமாக வழங்கப்பட்டன. . 52-வது பிறந்தநாளையொட்டி ஆதரவற்ற சிறுவர், சிறுமி களுக்கான கருணை இல்லங்கள் தொடங்கப்பட்டன. ஆலயங் களுடன் அந்தக் கருணை இல்லங்கள் இணைக்கப்பட்டு, செல வினங்களை ஆலய நிர்வாகமும் அரசும்பகிர்ந்து கொள்ளும் முறை யில் திட்டம் வகுக்கப்பட்டது. முப்பது வயதுக்குக் குறைந்த விதவைகளை மறுமணம் புரிந்துகொண்டால்-விதவை மணத்தை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் பத்தாயிர ரூபாய் அரசு சார்பில் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டு அந்தத் திட்டம் நடை முறைக்கும் கொண்டுவரப்பட்டது. ஆதரவற்ற விதவைத் தாய் மார்களுக்கு ஆயிரக்கணக்கான தையல் இயந்திரங்கள் இலவச மாக வழங்கப்பட்டன. நாற்பத்தி ஐந்து வயதான விதவைத் தாய்மார்களுக்கு முதியோர் உதவித் தொகை அளிக்கப்படு வதற்கு வழிவகுக்கப்பட்டது. கலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்தவும் அரசின் சார்பில் அந்தத் திருமணத் தம்பதிகளுக்கு சுமார் ஏழாயிர ரூபாய் கிட்டும் வகையில் குடும்ப நிதி வழங்கப்பட்டது. மணமக்கள் இரண்டு வேறு சாதியினராக இருந்தால் மட்டும் போதாது;