உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 311 ☐ அணிவகுத்து நின்ற அவர்தம் தானைத்தளபதிகளாம் மாநில முதல்வர்களாலேயே பின்பற்ற முடியாமல் போனது மட்டுமல்ல மத்திய அரசினை நடாத்தும் மகாத்மாவின் வாரிசுகளாலும் புறக்கணிக்கப்பட்டது வேதனை தரும் செய்தியாகும். கொழுந்து விட்டெரியும் நெருப்பு வளையத்திற்குள் கொளுத்தப்படாத கற்பூரமாகத் தமிழ்நாடு எத்தனை நாளைக்குத்தான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்?" என்று சட்டப்பேரவையில் பேசினேனே தவிர, மனச்சாட்சி இடங்கொடுக்காத நிலையில்தான் மதுவிலக்குச சட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தேன். மதுவிலக்குச் சட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி காமராசர் அவர்கள் போர்க்குரல் கொடுத்தார். அவரது கட்சியைச் சேர்ந்த பல்லாயிரவர் மறியல் செய்து சிறைச்சாலைக்குச் சென்றனர். அவர்கள் யார் மீதும் வழக்கு நடத்தி தண்டனை வாங்கித்தர முனையாமல் அனைவரும் விடுதலை செய்யப் பட்டார்கள். ஒத்திவைக்கப்பட்டிருந்த மதுவிலக்குச் சட்டத்தை 1973- ஆம் ஆண்டு மறுபடியும் அமல் நடத்தக் கழக அரசு முன் வந்து அவ்வாறே அறிவித்து மதுவிலக்கை மீண்டும் நடை முறைக்குக் கொண்டுவந்தது! ரத்து இன்றைக்கு மதுவிலக்கை ரத்து செய்துவிட்டுப் பல முனைகளிலும் கோடிக்கணக்கான ரூபாய்களை லஞ்சமாகக் குவிக்கிறார்களே; அது போல் இல்லாமல் அன்றைக்கு அரசின் நிதி ஆதாரத்திற்காக மட்டுமே மதுவிலக்கு கைவிடப்பட்டது! ஆம்; ஒத்திவைக்கப்பட்டது! பின்னர் மக்கள் கருத்தை மதித்து மதுவிலக்குச் சட்டம் எழுந்து நடமாடத் தொடங்கியது.