உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 319 மாவட்டத்தின் கொள்கைச் சிங்கமெனப் புகழப்பெற்ற உடுமலை நாராயணன் எம். பி. அவர்கள் மறைந்த காரணத்தால் அந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றது. மதியழகன் அவர்களின் தம்பி நே.ஏ.கிருஷ்ணசாமி அந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டுமென்று பிடிவாதம் செய்தார். அவருக்கு வெற்றிவாய்ப்பு இல்லையென்று கோவை மாவட்டக் கழகத்தினர் கூறிய காரணத்தால் கே.ஏ.கிருஷ்ணசாமிக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி தருவதாக வாக்களித்து மோகன்ராஜ் என்ற இளைஞரை வேட்பாளராக நிறுத்தப்பட்டது. அந்த மோகன்ராஜ் கட்சிக்கு ஒரு சோதனை வந்த காலகட்டத்தில் கட்சியினால் நாடாளுமன்ற உறுப்பினராக ஆனதைக்கூட மறந்து விட்டு ஒதுங்கிக்கொண்டார்! நல்ல வேளை கழகத்தைத் தாக்கிடவில்லை! அந்தமட்டில் லாபம்தானே! திட்டமிட்டபடி பொள்ளாச்சி தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு 1971 நவம்பர் 8-ஆம் நாள் மாலை அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்டேன். என்னுடன் முரசொலி மாறன், நிதித்துறைச் செயலாளர் வெங்கட்ரமணன் இருவரும் வந்தனர். கண் மருத்துவ நிபுணர் டாக்டர் வெங்கடசாமி அவர்கள், அமெரிக்காவில் எங்களை வந்து சந்திப்பதாகக்கூறி கூட்டியே சென்று விட்டார். முன் 4 8-ஆம் தேதி மாலை 6-45 மணி அளவில் சென்னையில் புறப்பட்ட விமானம் 8-30 மணி அளவில் பம்பாய் நகரை அடைந்தது. அங்கே பம்பாய் தமிழர்களின் சார்பில் தரப்பட்ட வரவேற்பை ஏற்றுக் கொண்டு, இரவு ஒரு மணி அளவில் புறப்பட்டோம். நவம்பர் 10-ஆம் தேதியன்று பகல் 3மணி அளவில் அமெரிக்கத் தலைநகரான வரஷிங்டன் போய்ச் சேர்ந்தோம். விமான நிலையத்தில் இந்தியத் தூதர் எல்.கே.ஜா, அமெரிக்க அரசின் வரவேற்புத்துறை உயர் உயர் அதிகாரிகள், அமெரிக்க வெளிநாட்டிலாகா அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர். அமெரிக்க விமான நிலையத்தில் அப்போது கழக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த விசுவநாதன் அவர்களும் என்னை வரவேற்றார். விமான நிலையத்திலிருந்து நேராக இந்திய தூதர் எல்.கே.ஜா அவர்களின் இல்லத்திற்குச் சென்றோம். நவம்பர் 12-ஆம் தேதியன்று அமெரிக்க ராஜாங்க இலாகாவின் உயர்மட்ட அதிகாரிகளிடம் வங்கதேசப்