உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 327 மிகப் பெரிய இந்திய நாட்டில் ஒவ்வொரு மாநில மக்களுக் கும் நல்வாழ்வு பெருகி, மாநிலங்கள் மேலும் மேலும் பலமும் வளமும் பெறவெண்டுமானால் மத்திய அரசில் குவிந்துள்ள அதிகாரங்கள் மாநிலங்களுக்குப் பரவலாக்கப்பட வேண்டு மென்று மாநில சுயாட்சிக் குரலை தி.மு.க. எழுப்பி வருகிறது மத்திய அரசை எந்த வகையிலும் பலவீனப்படுத்தாமல் மாநில சுயாட்சி அமைந்திட வழிவகைகள் உண்டு. அவைகளை விவாதித்து நல்ல முடிவுக்கு வரவேண்டும். ஒரு ஜன நாயக நாட்டில் இதனைப் பேசித் தீர்த்துக் கொள்வது இயலாத காரியமல்ல. இதனை வலியுறுத்திப் பேச இப்போது இந்தியாவில் நிலைமைகள் சரியில்லை. எண்ணிய தீவிரத் திட்டங்களை நிறைவேற்றமுடியாமல் எல்லையோர ஆக்ர மிப்பு! ஒரு ஜனநாயக நாட்டுக்கு ஏற்பட்டுள்ள. இந்தச் சோதனையை அமெரிக்கா போன்ற ஜனநாயக நாடுகள், தாமத மின்றி தயக்கம் காட்டாது தவிர்த்திட முன்வர வேண்டும். உலகம், யந்திரமயமாகிக் கொண்டு வருகிறது. உள்ளங் களும் யந்திரங்களாகி விட்டால் பிறகு உருகி அழுகின்ற கண்களையும் உவகையால் சிரிக்கின்ற உதடுகளையும் காண முடியாது. அந்த நிலைமை ஏற்படாமலிருக்க மனிதாபிமான உணர் வுடன் எதனையும் அணுகும் அன்பு வழி ஜனநாயக அரசியல் வளர்க்கப்படவேண்டும்". இவ்வாறு 23-11-71 அன்று மாலை சிகாகோ பல்கலைக்கழக அரசியல் அரங்கில் உரையாற்றினேன். சொற்பொழிவைத் தொடர்ந்து ஏறத்தாழ ஒரு மணி நேரம் கருத்தரங்கிற்கு வந்தவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளித் தேன். பல்கலைக்கழகப் பேராசிரியர் ருடால்ப் சிகாகோ பல்கலைக் கழக வளைவுக்குள் சிறப்பு விருந்து ஒன்றை அளித்தார். சிகாகோவில் மூன்று நாட்கள் தங்கிவிட்டு புகழ்பெற்றதும் மகத்தானதுமான் "நயாகரா" நீர்வீழ்ச்சியையும் பார்த்துக் களித்துவிட்டு, 25-ந் தேதி அன்று நியூயார்க் நகரை வந்தடைந் தேன். இந்திய தூதரக அதிகாரிகளும், நியூயார்க் நகர இந்தியர் களும் விமான நிலையத்தில் என்னை உற்சாகத்துடன் வரவேற் றனர். ஐ.நா.மன்ற தலைமையகத்தைச் சுற்றிப்பார்த்தேன். ஐ.நா. வின் பொதுச்செயலாளர் ஊதாண்டுக்கு அடுத்தபடியாக மிக