உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 நெஞ்சுக்கு நீதி உலகத்திற்கும் ஜனநாயக ரீதியில் அறிவித்துக் கொண்டிருக்கிற தகுந்த சாட்சியாகும். டாக்கா என்றாலே -டாக் என்ற ஒருவகை மரம் நிறைந்த இடம் என்றும் அதனால்தான் அப்பெயர் வந்தது என்றும் கூறு கிறார்கள். மரங்கள் அடர்ந்த ஒரு இடத்தில் ஒரு புதிய அரசு உருவாகியது. மரங்கள் அடர்ந்து இருந்த காரணத்தால் அந்தப் பெயரைப் பெற்ற ஒரு தலைநகரத்தில் இன்று அந்த அரசு நிலை பெறுகிறது. இந்தப் போர் இந்தியாவிலே ஒரு பகுதியில் நடை பெற்றாலும் இது தமிழ்நாட்டையும் பாதிக்கக் கூடிய போர் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. தமிழ் மாநிலம், ஆந்திர மாநிலம், கேரள மாநிலம், கர்நாடக மாநிலம், பஞ்சாப், மராட்டியம் என்ற பாகுபாடு இல்லாமல் அந்த ஒரே உத்வேகத் தோடு எதிரியை போர்முனையில் சந்தித்தோம். த 'ழ்நாட்டிற்கு ஒருவேளை போர் வராவிட்டாலும் தமிழ் நாடும் போர்முனையில் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. தமிழ்நாட்டு வீரர்களில் சிலர் -ஏன், பலர் என்றுகூடச் சொல்லலாம்-இந்தப் போரில் தங்கள் இன்னுயிரைத் தந்திருக் கிறார்கள்.அவர்கள் அணிந்திருந்த ராணுவ உடைகள் அவர் களது வீட்டிற்கு திரும்ப அனுப்பப்பட்டிருக்கின்றன. அந்த உடைகளை கண்ணீரால் நனைத்து, தங்கள் அருமந்தச் செல்வனின் நினைவாக - வீட்டுத் தலைவனின் நினைவாக பேழையில் வைத்துப் பூட்டி அப்பேழைகளுக்கு மலர் கொண்டு பூஜித்துக் கொண்டிருக் கிற அந்த வீட்டுத் தாய்மார்கள் நம் அனுசரணைக்கும் ஆதர விற்கும் உரியவர்கள். நாம் மண்ணாசை பிடித்தலையவில்லை என்பதற்கு எடுத்துக் காட்டாக போர் நிறுத்தம் செய்கிறோம் என்று சொல்லியிருக் கிறோம். முதலில் இந்தியாவில் போர் தொடுத்தது பாகிஸ்தான். போர் தொடுப்பதில் முந்திக்கொண்டது பாகிஸ்தான். இன்று போர் நிறுத்தம் செய்கிறோம் என்பதில் முந்திக் கொண்டிருப்பது இந்தியா. இதை மனதில் கொண்டு உலக நாடுகளில் சில நாடுகள் தாங்கள் எடுத்த அநியாயமான முடிவுகளிலிருந்து தங்களை மாற்றிக்கொள்ளா விட்டால் இந்தியா அவர்களுக்கு மேலும் புத்தி வரக்கூடிய அளவிற்கு பாடத்தைப் புகட்டும் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை.