உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 341 ☐ ஆளும் கட்சியான தி.மு. கழகம், தோழமைக் கட்சி களில் ஒன்றாக இருப்பினும், அதன் ஆட்சியின் போக்குபற்றி கருத்து அறிவிக்கவும் தங்கள் தங்கள் கட்சிக் கொள்கை களுக்கு ஏற்ப செயல்படவும் இருக்கின்ற உரிமைகளை இப் பொதுக் குழு குழு ஏற்று வரவேற்கிறது என்றாலும், பிற்போக்கு சக்திகளும் வன்முறையாளர்களும் வலுப்பெறும் வகையில், ஆளும்கட்சியான தோழமைக் கட்சிக்கு எதிராக மேற்குறிப் பிட்ட இரண்டு கட்சிகளும் எடுக்கும் நடவடிக்கைகள் கழகத் தின் எல்லா மட்டத்திலும் கசப்பு உணர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும் தோழமை உணர்வோடு அந்த இரண்டு கட்சிகளுக்கும் இந்தப் பொதுக்குழு தெரியப்படுத்திக் கொள்கிறது. இந்த விரும்பத்தகாத நிலை மேலும் நீடிக்கக் கூடாது என இக்குழு கருதுவதோடு தவிர்க்க முடியாத அளவில் இந்த நிலை தொடருமானால் அதுபற்றி இறுதி முடிவெடுக்க கழகத் தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோருக்கு பொதுக்குழு அதிகாரம் அளிக்கிறது." இந்தத் தீர்மானத்தை மதுரை மேயர் முத்து முன்மொழிய தென்னரசு, சேப்பெருமாள் ஆகியோர் வழி மொழிந்தனர். 2) அண்மையில் சென்னையில் ஏற்பட்ட தொழிலாளர் பிரச்சினையில் மத்திய அரசின் அமைச்சர் ஒருவர், மாநில அரசுடன் எந்தவித தொடர்பும் கொண்டு கலந்து பேசாமல் பிரச்சினையை சுமுகமாகத் தீர்ப்பதற்குப் பதிலாக, மத்திய மாநில அரசுகளின் உறவுகளைப் பாதிக்கும் வகையில் பேசியதும் நடந்து கொண்டதும், ஆளும் கட்சியும் நேசக் கட்சியுமாக உள்ள தி.மு.கழகத்தை அலட்சியப்படுத்தும் போக்காக அமைந்துள்ளதை, இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுவதோடு, இது போன்ற நிலை இனி ஏற்படாத வண்ணம் பிரதமர் கண் காணிப்பார் என்று நம்புகிறது. இந்தத் தீர்மானத்தை அரங்கண்ணல் அவர்கள் முன் மொழிய, நீலநாராயணன் அவர்களும், வீரபாண்டி ஆறுமுகம் அவர்களும் வழி மொழிந்தனர். இந்தப் பொதுக்குழுத் தீர்மானத்திற்குப் பிறகு இந்திரா காங்கிரஸ், தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது பகைக்கவே தொடங்கி விட்டது என்றே கூறலாம். கழகத்தில் சரிவு ஏற்படுத்த என்ன வழி என்று யோசித்தனர். அமைச்சராக